குஜராத் : ஐம்பதுக்கு அறுபத்து ஆறு மதிப்பெண் அளித்த ஆசிரியர்

கமதாபாத்

ந்த வருடம் நடந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களில் பலருக்கு ஆசிரியர்கள் மதிப்பெண்களை தவறாக வழங்கி உள்ளனர்.

 

கடந்த சில வருடங்களாக குஜராத் மாநிலத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தவறுதலாக கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ மதிப்பெண்கள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதற்காக குஜராத் அரசு சென்ற வருடம் முதல் விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்களுக்கு தவறாக அளிக்கும் ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும் ரூ.50 அபராதம் விதிப்பதாக அறிவித்தது.

இதை போல கண்காணிப்பு அதிகாரிக்கு ரூ.75 எனவும் தலைமை அதிகாரிக்கு ரூ.100 எனவும் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தது. இந்த வருட தேர்வு முடிவுகள் சென்ற மாதம் வெளியாகி உள்ளது. இம்முறை சுமார் 17 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்த 22,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த அபராத அறிவிப்பு ஆசிரியர்களிடையே எவ்வித தாக்கமும் உண்டாக்கவில்லை என தெரிய வந்துள்ளது.

கணக்கியல் தேர்வில் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு ஆசிரியர் நூற்றுக்கு 86 மதிப்பெண்கள் அளித்துள்ளார். அந்த மாணவர் மொத்தம் 30 மதிப்பெண்களுக்கான கேள்விகளுக்கு மட்டுமே விடை அளித்துள்ளார். இதே பாடத்தில் நூற்றுக்கு 55 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள ஒரு மாணவர் உண்மையில் 85 மதிப்பெண் பெற்றுள்ளார்.

இது குறித்து குஜராத் பள்ளிக் கல்வித்துறை அதிகாரி ஒருவர், “விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். அவரள் அளிக்கும் ஒவ்வொரு மதிப்பெண்ணும் ஒரு மாணவனுக்கு உயர்வையும் ஏற்படுத்தலாம் அல்லது தாழ்வையும் ஏற்படுத்தலாம் என்பதை மனதில் கொண்டு விடைத் தாளகளை திருத்த வேண்டும்” என கூறி உள்ளார்.

இந்த வருடம் நடந்த தவறுதல்களில் மற்றொரு மிகப்பெரிய தவறு நடந்துள்ளது. இந்த வருடம் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய ஒரு மாணவனுக்கு ஆசிரியர் 66 மதிப்பெண்கள் அளித்துள்ளார். ஆனால் தேர்வின் மொத்த மதிப்பெண்ணே 50 ஆகும். அதாவது அந்த மாணவனுக்கு 50 க்கு 66 மதிப்பெண்கள் கிடைத்துள்ளது.