யூதர்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து அளிக்கப்படும் : குஜராத் முதல்வர்

ஜெருசலேம்

குஜராத்தில் வாழும் யூதர்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து அளிக்கப்படும் என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கடந்த ஜனவரி மாதம் குஜராத் மாநிலத்துக்கு வருகை தந்தார்.   அப்போது அவர் குஜராத் முதல்வர் விஜய் ரூபானியை இஸ்ரேல் நாட்டுக்கு வருமாறு அழைத்தார்.   அந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ஜூன் 26 முதல் ஜூலை 1 வரை ஆறு நாள் பயணமாக இஸ்ரேல் நாட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் இஸ்ரேல் நாட்டு அமைசர்கள் மற்றும் பிரதமருடன் உள்நாட்டுப் பாதுகாப்பு,  நீர் மேலாண்மை மற்றும் விவசாயத்தில் இஸ்ரேலின் பங்கு குறித்து விவாதிக்க உள்ளதாக முதல்வர் தனது இஸ்ரேல் பயணத்தின் தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்.   குஜராத் மாநில விவசாயத்துறை அமைச்சர் ஜயதத்சிங் பர்மார் முதல்வருடன் இஸ்ரேல் சென்றுள்ளார்.

யூதர்களின் நாடான இஸ்ரேலில் பேசும் போது குஜராத் முதல்வர், “இந்தியாவில் பல யூதர்கள் வசிக்கின்றனர்.   குறிப்பாக குஜராத் மாநிலத்திலும் யூதர்கள் நீண்ட நெடுங்காலமாக உள்ளனர்.  அவர்களுக்கு சிறுபான்மை அந்தஸ்தை குஜராத் மாநில அரசு அளிக்கும்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.