பெற்ற தாயை பலாத்காரம் செய்த மகன் : குஜராத்தில் கொடூரம்

லன்பூர், குஜராத்

பாச படம் பார்த்த ஒரு வாலிபன் தன்னைப் பெற்ற தாயை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள பலன்பூர் என்னும் ஊர் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ளது.    இந்த ஊரில் வசிக்கும் ராகுல் என்பவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.   தாயுடன் வசித்து வரும் அவருக்கும் அவர் தாயாருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நிகழ்ந்து வீடே கூச்சலாக இருக்கும்   பணி முடிந்து வீடு திரும்பும் ராகுல் நள்ளிரவு சுமார் ஒரு மணி வரை தனது மொபைலில் ஆபாச வீடியோக்கள்  பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

சம்பவ தினத்தன்று இரவு வீடியோ பார்த்துக் கொண்டிருந்த ராகுல் தனது தாய் உறங்கிக் கொண்டிருந்த அறைக்கு தண்ணீர் குடிக்க சென்றுள்ளார்.   திடீரென அவர் தனது 46 வயது தாய் மீது பாய்ந்து பலாத்காரம் செய்துள்ளார்.   அவர் தாய் அதிர்ச்சி அடைந்து கூச்சல் இட்டுள்ளார்.   வழக்கம் போல தாய்க்கும் மகனுக்கும் தகராறு என நினைத்த அக்கம் பக்கத்தோர் இதை கவனிக்கவில்லை.

இதை அடுத்து வெளியூரில் வசிக்கும் தனது கணவரிடமும் மூத்த மகனிடமும் இது குறித்து அந்தத் தாய் தெரிவித்துள்ளார்.   மூத்த மகனின் கூறியதால் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு ராகுல் கைது செய்யப்பட்டுள்ளார்.    அவர் ஏற்கனவே தனது தாய் மற்றும் தந்தை முன்பே இது போல வீடியோக்களை பார்ப்பது வழக்கம் என தெரிய வந்துள்ளது.    தற்போது மகனின் இந்த செயலால் மனநிலை பாதிக்கப்பட்டுள்ள அந்த தாய் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.