பெங்களூரு

ர்நாடகாவில் குஜராத்தி வியாபாரிகள் கடை விரித்துள்ளதாக குமாரசாமி தெரிவித்துள்ளார்

கர்நாடகாவில் மஜத மற்றும் காங்கிரஸ் இணையும் போது பெரும்பான்மை இடங்கள் உள்ளதால் இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது.    ஆனால் அதிக இடம் பெற்றுள்ள கட்சி என காரணம் கூறி பெரும்பான்மை இல்லாத பாஜகவை ஆளுனர் ஆட்சி அமைக்க அழைத்தார்.  அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பாஜக ஆட்சி அமைக்க தடை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மஜத தலைவரான குமாரசாமி, “குஜராத்தி வியாபாரிகள் கர்நாடகாவில் கடை விரித்துள்ளனர்.   மூன்று வியாபாரிகள் உள்ளனர். மோடி, ஷா மற்றும் வாலா ஆகியோர்.  நாங்கள் நிச்சயம் எதிர்துப் போரிடுவோம்.  நாங்கள் அவர்களை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என நான் எச்சரிக்கை விடுக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.