குஜராத் மாநில அரசின் கடன் ரூ.1.96 லட்சம் கோடியாக அதிகரிப்பு

காந்திநகர்:

குஜராத் மாநில அரசின் கடன் ரூ. 1.96 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ சைலேஷ் பர்மார் சட்டமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு நிதியமைச்சர் நிதின் படேல் கேள்வி நேரத்தின் போது பதிலளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘2016&17ம் ஆண்டில் திருத்தி அமைக்கப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டில் குஜராத் மாநிலத்தின் கடன் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 809 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. 2015&16ம் ஆண்டை விட 16 ஆயிரத்து 66 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. அப்போது மொத்த கடன் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 743 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

2015&16ம் ஆண்டில் 14 ஆயிரத்து 456 கோடி ரூபாயை குஜராத் அரசு வட்டியாக செலுத்தியுள்ளது. 6 ஆயிரத்து 194 கோடி ரூபாய் அசல் செலுத்தப்பட்டுள்ளது. 2016&17ம் ஆண்டில் ரூ.16,260 கோடி வட்டியும், ரூ.13,434 கோடி அசலும் செலுத்தப்பட்டுள்ளது. 2015&16ம் ஆண்டில் ரூ.16,260 கோடியும், 2018&17ம் ஆண்டில் ரூ.24,720 கோடியும் கடன் பெறப்பட்டுள்ளது’’ என்றார்.

கார்ட்டூன் கேலரி