போராட்டத்தில் உடைந்த தண்டவாளங்களைப் பழுது பார்க்கும் குஜ்ஜார் போராளிகள்

ரத்பூர்

ராஜஸ்தானில் குஜ்ஜார் இனத்தவர் தங்கள் போராட்டத்தின் போது உடைந்த தண்டவாளங்களை அவர்களே பழுது பார்த்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பரத்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் குஜ்ஜார் இன மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.  இவர்கள் நீண்ட நாட்களாக தங்களுக்கு 5% இட ஒதுக்கீடு கோரி வருகின்றனர்.  ஆனால் அரசு இவர்கள் கோரிக்கையைக் கவனத்தில் கொள்ளாமல் இருந்து வந்துள்ளது.

இதையொட்டி குஜ்ஜார் இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  இந்த போராட்டத்தில் அவர்கள் ரயில் மறிப்பு மற்றும் சாலை மறிப்பு போராட்டங்களை நடத்தினார்கள்.    கடுமையான போராட்டத்துக்குப் பிறகு அரசு இவர்களது கோரிக்கைக்குச் செவி சாய்க்க முன் வந்தது.

குஜ்ஜார் இனத் தலைவர் கிரோரி சிங் பைன்ஸ்லா மற்றும் முதல்வர் இடையே நேற்று நடந்த சந்திப்பில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது.  இதை அடுத்து குஜ்ஜார் இன மக்கள் தங்கள் போராட்டத்தை நிறுத்தி உள்ளனர்.  மேலும் அவர்கள் போராட்டத்தின் போது உடைந்து போன தண்டவாளங்களை அவர்களே பழுது பார்த்து வருகின்றனர்.

இந்த நிகழ்வு வீடியோவாகி இணையத்தில் பரப்பப்பட்டு வைரலாகி வருகிறது.