இந்தியர்கள் நுழைய கட்டுப்பாடுகள் தொடரும் வளைகுடா நாடுகள்: மத்திய அமைச்சர் தகவல்

டெல்லி: இந்தியர்கள் நுழைய சில நாடுகள் இன்னமும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தமது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது: மே 6ம் தேதி முதல் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஆனாலும், வளைகுடாவில் உள்ள சில நாடுகள் இந்தியர்கள் நுழைய கட்டுப்பாடுகளை இன்னமும் விதித்துள்ளன, அவற்றை நீக்கவில்லை.

இந்த நாடுகளுக்கு பயணிகள் வர கட்டுப்பாடுகளை எளிதாக்கினால் அதிக பயணிகளுடன் வர தயாராக உள்ளோம் என்று தெரிவித்து உள்ளார்.