ஜனவரி 31-ஆம் தேதி ரிலீசாகிறது மலாலா வாழ்க்கை திரைப்படம்…!

பெண்கல்வியை வலியுறுத்தி மலாலா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2012-ஆம் ஆண்டு பள்ளிப்பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமி மலாலா மீது தலீபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.படுகாயமடைந்த மலாலாவிற்கு லண்டனில் சிகிச்சை அளிக்க்ப்பட்டது.

2014-ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார் மலாலா .

இவரின் வாழ்க்கை பயணத்தை அடிப்படையாக கொண்டு, ‘குல் மகாய்’ என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் அம்ஜத் கான் படமாக்கி வருகிறார் . மலாலாவின் கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரம் ரீம் ஷைக் நடிக்கிறார். இப்படத்தின் முதல் நாள் வசூல் தொகையை மலாலா நிதிக்காக வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படம் ஜனவரி 31-ஆம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.