டில்லி :’குடிமகன்’களின் பார்க்கிங் தகராறால் துப்பாக்கி சூடு

டில்லி

பார் ஒன்றில் பார்க்கிங் குறித்து நடந்த தகராறால் ஒருவர் துப்பாக்கியால் சுடப் பட்டுல்ளார்.

தெற்கு டில்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உல்ள மது பான பார் ஒன்றில் வாகனம் நிறுத்தும் இடத்தில் இரு குடிமகன்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.   இன்று அதிகாலை சுமார் 3.30 மணிக்கு மேல் பாரில் இருந்து வெளி வந்த வினய் மற்றும் உமேஷ் ஆகிய இருவரும் வாகன நிறுத்தத்தில் தங்களின் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் தகராறு உண்டாகியது.

வாய்ச்சண்டை முற்றியதால் உமேஷ் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார்.    அதனால் குண்டு பாய்ந்து வினய் கழுத்தில் பலத்த காயம் அடைந்து அவர் கீழே விழுந்துள்ளார்.   அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.    துப்பாக்கியால் சுட்ட உமேஷை அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

உமேஷை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   மதுபான பார்கள் நள்ளிரவு 1 மணியுடன் மூட வேண்டும் என டில்லியில் விதிமுறைகள் உண்டு.   அதை மீறி அதிகாலை 3.30 மணி வரை செயல்பட்ட இந்த பாரை மூடி சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.