லாஸ் வேகாஸ் காசினோவில் துப்பாக்கி சூட்டில்  இருவர் மரணம் : விமானங்கள் ரத்து

லாஸ் வேகாஸ்

லாஸ்வேகாஸ் நகரில் ஒரு சூதாட்ட விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் இருவர் மரணமடைந்துள்ளனர்.  20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

லாஸ்வேகாஸ் நகரில் காசினோ என அழைக்கப்படும் சூதாட்ட விடுதிகள் ஏராளமாக உண்டு.   இதில் ஒரு சூதாட்ட விடுதியில் ஒரு கும்பல் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது.   இதில் இருவர் மரணம் அடைந்துள்ளனர்.  20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி சூடு நடத்தியவர்களில் ஒருவரும் மரணமடைந்துள்ளதாக போலீசாரின் தகவல் ஒன்று தெரிவிக்கிறது    இது குறித்து சில மீடியாக்களில் வெளியான வீடியோ பதிவு மக்கள் காசினோவை விட்டு ஓடி வருவதையும், பின்னணியில் துப்பாக்கி சூடு சப்தம் கேட்பதும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.   அடிபட்டோர் மற்றும் மரணமடைந்தோர் பற்றிய உண்மை நிலவரம் இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.   நகரெங்கும் போலீஸ் காவல் பலப்படுத்தப் பட்டுள்ளது.  விமானநிலையத்தில் இறங்க பல விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.   கிளம்பும் விமான சர்வீஸ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.