இஸ்லாமாபாத்:

‘பனாமா கேட்’ ஊழல் வழக்கு விசாரணை குழுவில் இடம்பெற்றிருந்த உச்சநீதிமன்ற நீதிபதி இஜாஸ் உல் அஹ்சான் என்பவரது வீட்டின் மீது இன்று மர்மநபர்கள் இருமுறை துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

லாகூர் நகரின் மாடல் டவுன் பகுதியில் உள்ள அவரது வீட்டின்மீது இன்று அதிகாலை 4.30 மணிக்கும், காலை 9 மணிக்கும் இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது. இரு தோட்டாக்கள் வீட்டின் முன்புற கதவையும், சமைலறை கதவையும் துளைத்துள்ளது.

இதை தொடர்ந்து நீதிபதியின் வீடு மற்றும் அருகாமையில் உள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நவாஸ் ஷெரீப் பதவி பறிப்பு மற்றும் வாழ்நாள் தடை விதிப்புக்கும் பனாமா கேட் வழக்கு தான் காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.