Random image

பெரியார் சிலை மீது செருப்பு வீச்சு: வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சென்னை:

பெரியார் பிறந்த தினத்தன்று, அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள  பெரியார் சிலை மீது செருப்பை வீசிய வழக்கறிஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது, அவர்மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

பெரியார் 140வது பிறந்த நாள் கடந்த 17ந்தேதி கொண்டாடப்பட்டது.  இதையொட்டி சென்னை அண்ணா சாலை சிம்சன் கம்பெனி எதிரில் உள்ள பெரியார் சிலை அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அந்த சிலை மீது சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெகதீசன்  செருப்பை வீசியதாக அங்கிருந்தவர்கள் அவரை  பிடித்து உதைத்து  காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. அவரிடம் போலீசார் நடத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.