ரம்ஜான் விருந்தில் ராணுவத்தினர் துப்பாக்கி சூடு : நான்கு பெண்கள் காயம்

போரா , காஷ்மீர்

காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தினர் அளித்த ரம்ஜான் விருந்தில் கலவரம் ஏற்பட்டதால் துப்பாக்கி சூடு நிகழ்ந்து 4 பெண்கள் காயம் அடைந்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் சோபியன் மாவட்டத்திலுள்ளது போரா என்னும் ஊர்.  இங்கு ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு ராணுவத்தினர் பிரியாணி விருந்து ஒன்றை நடத்தினர்.  மத்திய அரசு அறிவித்த போர் நிறுத்த அறிவிப்பில் இதுவும் ஒரு நிகழ்வாகும்.   மாநிலத்தில் நல்லெண்ணமும் அமைதியும் நிலவ ராணுவம் இந்த விருந்தை நிகழ்த்தியது.

கிராமத்தின் நடுவில் ராணுவத்தினர் அமைத்த இந்த விருந்தில் கலந்துக் கொள்ள கிராம வாசிகள் மறுத்துள்ளனர்.   அதை ஒட்டி இரு தரப்பினருக்கும் இடையே கலவரம் உண்டாகியது.   கிராம மக்களில் சிலர் கற்களை வீசி எறிந்து ராணுவத்தினரை தாக்கி உள்ளனர்.   அவர்கள் கலைந்து செல்ல ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.   இந்த துப்பாக்கி சூட்டில் 15 முதல் 17 வயதான 4 பெண்கள் குண்டடி பட்டுள்ளனர்.

காவல்துறையினர் அந்த பெண்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.  அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவ மனை நிர்வாகம் அறிவித்துள்ளது.