கர்நாடகாவில் போலீஸ் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி

பெங்களூரு:

காவிரிப் பிரச்சினை தொடர்பாக, கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில்  வன்முறையில் ஈடுபட்டோர் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒமருவர் உயிரிழந்தார். இன்னொருவர் காயமடைந்தார்.

b

பெங்களூரு ராஜகோபால் நகர் பகுதியில்  ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டது.  காவல்துறையினர் கலவரக்காரர்களை எச்சரித்தும் அவர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதால்  காவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில், உமேஷ் (28) என்பவர் உயிரிழந்தார். அவர் ஹெக்கனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓம்பிரகாஷ்
ஓம்பிரகாஷ்

நிலைமை பதற்றமாக இருக்கிறது என்றாலும், கட்டுக்குள் இருப்பதாக கர்நாடக காவல் துறை தலைவர் ஓம்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று கர்நாடக அமைச்சரவையின் அவசரக்கூட்டம் முதல்வர் சீதாராமைய்யா தலைமையில் நடக்க உள்ளது. இதில் பெங்களூரு கலவரம் மற்றும் வன்முறையை தடுப்பது  குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று சொல்லப்படுகிறது.