அமெரிக்க யோகா மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் உள்ள யோகா மையம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவர் 2 பேரைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.

yoga-gun-shot

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள டல்லாஹஸியில் யோகோ பயிற்சி மையம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நேற்று மாலை திடீரெனப் நுழைந்த ஒருவர் அங்கே பயற்சியில் ஈடுப்பட்டிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார்.

கடைசியில் தன்னையும் சுட்டுக்கொண்டு அந்த நபர் தற்கொலை செய்துகொண்டார். அவர் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் அடையாளம் இதுவரை அறியப்படவில்லை. அவர் எதற்காக இத்தாக்குதலை நடத்தினார் என்பது குறித்து அந்நாட்டுப் போலீசார் விசாரித்து வருகின்றனர். அண்மைக் காலமாக அமெரிக்காவில் மக்கள் கூடும் பகுதிகளில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடைபெறுவது வழக்கமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.