ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் – காலிறுதியில் நுழைந்தார் குன்னேஸ்வரன்!

ஆர்லாண்டோ: அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் இந்திய வீரர் குன்னேஸ்வரன்.

இத்தொடரின் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில், சீன தைபேயின் துங்-லின் உடன் மோதினார்.

இம்மோதலில், முதல் செட்டில் தோல்வியடைந்த குன்னேஸ்வரன், பின்னர் எழுச்சிப்பெற்று, இரண்டாவது செட்டை வென்றார்.

பின்னர், மூன்றாவது செட்டில் குன்னேஸ்வரன் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது, காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார் சீன தைபே வீரர்.

இதனால், குன்னேஸ்வரன் வென்றதாக அறிவிக்கப்பட்டு காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார்.