துப்பாக்கிகளுடன் ஆயுத பூஜை கொண்டாடிய இந்து மக்கள் கட்சி , அர்ஜூன் சம்பத்!

ந்துத்துவ பிரமுகரும்  இந்து மக்கள் கட்சி தலைவருமான அர்ஜூன் சம்பத், துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்டவைகளை வைத்து வழிபட்டு  ஆயுத பூஜை கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில்,  “இன்று 10-10-2016 திங்கள் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை எனது இல்லத்தில் நடைபெற்ற சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை படங்கள்” என்ற தலைப்பில் அர்ஜூன் சம்பத் சில படங்களை வெளியிட்டுள்ளார்.

14523244_1260563237328135_4179106401236427662_n

அந்த படத்தில் சில துப்பாக்கிகளும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

“இத்தனை துப்பாக்கிள் அர்ஜூன் சம்பத்துக்கு எப்படி கிடைத்தன? அதற்கு உரிய லைசன்ஸ் வைத்திருக்கிறாரா? இல்லையென்றால் சட்டத்துக்குப் புறம்பாக இத்தனை துப்பாக்கிகள் வைத்திருக்கும் அவர் மீது என்ன நவடிக்கை எடுக்கப்படும்” என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இது குறித்து காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அந்த படங்களை அர்ஜூன் சம்பத் நீக்கிவிட்டார்.