யோகிபாபு அந்தரத்தில் தொங்கிக் கொண்டு டயலாக் பேசும் கூர்க்கா டிரைலர்…!

நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகிவரும் ‘கூர்க்கா’ திரைப்படத்ம் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவான படம் ‘கூர்கா’. இதில் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். காமெடி, ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகி வரும் கூர்காவில் நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.இப்படத்திற்கு தணிக்கை குழு “யு” சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில் , இப்படம் வருகிற ஜூலை 12-ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் கூர்க்காவின் டிரைலர் வெளியாகியுள்ளது . இந்த டிரைலரில் தளபதி விஜய்யை கலாய்க்கும் வகையில் யோகி பாபு டயலாக் பேசி அசத்தியுள்ளார். மேலும், இந்த உலகமே உன்ன எதிர்த்தாலும் நீயா ஒத்துக்கொள்ளும் வரைக்கும் எவனாலும் எங்கேயும் எப்போதும்…என்று அந்தரத்தில் தொங்கிக் கொண்டு டயலாக் பேசுகிறார்.

கார்ட்டூன் கேலரி