நட்சத்திரம் வாரியாக குருப்பெயர்ச்சி பலன்கள்: தனுசு ராசி! வேதாகோபாலன் (ஆடியோ)

ந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்யப் போகிறார். 12 ராசி களில் உள்ள அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களுக்கும் குருப்பெயர்ச்சி பலன்களை, எளிமையான முறையில் பிரபல ஜோதிடர் திருமதி வேதா கோபாலன், பத்திரிகை.காம் வாசகர்களுக்காக பிரத்யேகமாக கணித்துள்ளார்…

கடந்த 16ந்தேதி முதல் வெளியாகி வருகறது. இன்று தனுசு ராசிக்கான பலன்கள் வெளியாகி உள்ளது. வரும்  27ந்தேதி வரை தினசரி ஒரு ராசி வீதம் பத்திரிகை.காம் இணைய இதழில் ஆடியோ செய்தியாகவும், தனிச்செய்தியாகவும் பிரசுரமாகிறது…. 

ன்புள்ளம் கொண்ட வாசகர்களுக்கு வணக்கம்.  29.10.2019 (அதாவது விகாரி வருடம் ஐப்பசி மாதம் 12) அன்று குரு பகவான் இத்தனை காலம் குடியிருந்த விருச்சிக ராசியிலிருந்து பெயர்ந்து தனுசு ராசிக்குள் பிரவேசிக்கிறார். அது அவரின் சொந்தவீடு என்பதாலும் இத்தனை காலம் கேது மற்றும் சனி அந்த வீட்டில் இருந்து வந்ததால் ஏற்பட்டிருந்த கெடு பலன்களை தேவ குருவாகிய இவர் பெருமளவு குறைப்பார் என்பதாலும் பன்னிரண்டு ராசிகளுக்கும் நற்பலன்களே உறுதியாகக் கிடைக்கும். பொதுப்பலன்களும் நன்றாகவே இருக்கும்.

நாட்டின் நிதி நிலமை மேம்படும். இயற்கை சீற்றங்கள் குறையும். தண்ணீர்ப் பற்றாக்குறை குறையும். திருமணம் ஆகாத வர்களுக்குத் திருமணம் நடக்கும். குழந்தை பிறக்காதவர்களுக்குக் குழந்தை பிறக்கும். வேலை கிடைக்காத வர்களுக்கு வேலை கிடைக்கும். இது எல்லாம் ஏற்கனவே அமையப்பெற்றவர்களுக்குக்கூடுதல் நன்மைகள் நிகழும்.

-வேதா கோபாலன்

       

தனுசு ராசி:

தனுசு ராசி மூலம் நட்சத்திரம் உள்ள அன்பர்களுக்கு,

குடும்ப வாழ்வில் நெருக்கடிகள் ஏற்படலாம். எனினும் தொழில்சார்ந்த வாழ்வில் சிறந்த வெற்றிகளை அடைவீங்கப்பா. அலுவலகத் திலும் பாராட்டுக்கிடைக்கும். தள்ளித் தள்ளிப்போயிக்கிட்டிருந்த கல்யாணம் இதோ கிட்டே வரும்.  குடும்பம் மற்றும் ஆன்மீகம் தொடர்பான சில விஷங்களில் உங்கள் பணத்தை நீங்கள் முதலீடு செய்வீங்க. உங்களுக்கு வருமானமும் சேமிப்பும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் பணத்தைப் பற்றி அதிகம் கவலைப்படத் தேவை இருக்காது. மாணவர்கள் தங்களுக்கேற்ற கல்வி நிறுவனங்களையும் பாடத்திட்டங்களையும் புத்திசாலித்தனமான வகையில் தேர்ந்தெடுத்திருப்பதால் எதிர்காலம் அவர்களுக்கு அற்புதமான வகையில் அமையும். எதையும் நிறைய முயற்சிக்குப்பின்னரே அடைவீங்க. ஸோ வாட்?

தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் உள்ள அன்பர்களுக்கு,

இனி வரும் காலம் மிகவும் அமோகமாக அமைந்து விடும். எதைத் தொட்டாலும் வெற்றி நிச்சயம். ஆனாலும் நீங்க செய்ய வேண்டியதெல்லாம், எல்லா விஷயங்களிலும் சற்று பொறுமையாகக் காத்திருப்பதுதான்.   வெற்றி வாய்ப்புக்கள் சற்றே தாமதம் அடைந்தாலும் சக்ஸஸ் உறுதிங்க குடும்பம், காதல், உத்தியோகம் போன்ற விஷயங்களில் நிறைவு அளித்தாலும் நீங்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது உங்களுடைய ஆரோக்கியத்தில்தான். பிசினஸ் மற்றும் உத்யோக விஷயங்களில் இந்த ஆண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும் வாய்ப்புக்கள் உள்ளன. திருமணம் ஆனவர்கள் மகப்பேற்றுக்குத் திட்டமிடலாம். நீங்கள் பணி செய்யுமிடத்தில் சில பிரச்சினைகளை சமாளிக்க நேரிடலாம்.

தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதம் உள்ள அன்பர்களுக்கு,

உங்களோட புத்தி சாதுரியத்தினாலும் கடுமையான உழைப்பினாலும் எந்தப் பிரச்சினைகளில் இருந்தும் நீங்க வெளியேறுவீங்க. அனைவரிடமும் மிகவும் அன்பாகப் பழகுங்க.  உங்கள் நல்ல தன்மை உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்தை வழிவகுக்கத் துணையாக நிற்கும். மாணவர்களுக்கு சாதகமான நிலை அமையுமுங்க. அமைதியாவும் அடக்கமாவும் இருங்க போதும்.  அடுத்தடுத்து வரும் காலத்தை நிம்மதியாகக் கடந்து செல்ல உங்களுடைய இந்தக் குணம் உதவி செய்யும்.. உங்களை நேசிப்பவர்கள் மற்றும் குடும்பத்தினர் உங்களுடைய பேச்சையும் போக்கையும் தவறாக எடுத்துக் கொள்ளும் வாய்ப்புக்கள் உள்ளன. ஆகவே நீங்க உங்க நம்பிக்கைக்கு உரியவர்களுடன் மட்டுமே தொடர்புகளை வைச்சுக்குங்க. உங்க தொழில்.

குருப்பெயர்ச்சி பலன்களுக்கான ஆடியோ செய்தியாக கேட்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

 

 

 நாளை…  மகரம் ராசிக்குரிய பலன்கள்

 

 

கார்ட்டூன் கேலரி