நட்சத்திரம் வாரியாக குருப்பெயர்ச்சி பலன்கள்: கடகம் ராசி! வேதாகோபாலன் (ஆடியோ)

ந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்யப் போகிறார். 12 ராசி களில் உள்ள அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களுக்கும் குருப்பெயர்ச்சி பலன்களை, எளிமையான முறையில் பிரபல ஜோதிடர் திருமதி வேதா கோபாலன், பத்திரிகை.காம் வாசகர்களுக்காக பிரத்யேகமாக கணித்துள்ளார்…

வரும் 16ந்தேதி முதல் 27ந்தேதி வரை தினசரி ஒரு ராசி வீதம் பத்திரிகை.காம் இணைய இதழில் ஆடியோ செய்தியாகவும், தனிச்செய்தியாகவும் பிரசுரமாகிறது…. 

ன்புள்ளம் கொண்ட வாசகர்களுக்கு வணக்கம்.  29.10.2019 (அதாவது விகாரி வருடம் ஐப்பசி மாதம் 12) அன்று குரு பகவான் இத்தனை காலம் குடியிருந்த விருச்சிக ராசியிலிருந்து பெயர்ந்து தனுசு ராசிக்குள் பிரவேசிக்கிறார். அது அவரின் சொந்தவீடு என்பதாலும் இத்தனை காலம் கேது மற்றும் சனி அந்த வீட்டில் இருந்து வந்ததால் ஏற்பட்டிருந்த கெடு பலன்களை தேவ குருவாகிய இவர் பெருமளவு குறைப்பார் என்பதாலும் பன்னிரண்டு ராசிகளுக்கும் நற்பலன்களே உறுதியாகக் கிடைக்கும். பொதுப்பலன்களும் நன்றாகவே இருக்கும்.

நாட்டின் நிதி நிலமை மேம்படும். இயற்கை சீற்றங்கள் குறையும். தண்ணீர்ப் பற்றாக்குறை குறையும். திருமணம் ஆகாத வர்களுக்குத் திருமணம் நடக்கும். குழந்தை பிறக்காதவர்களுக்குக் குழந்தை பிறக்கும். வேலை கிடைக்காத வர்களுக்கு வேலை கிடைக்கும். இது எல்லாம் ஏற்கனவே அமையப்பெற்றவர்களுக்குக்கூடுதல் நன்மைகள் நிகழும்.

-வேதா கோபாலன்

கடகம் ராசி,

புனர்பூசம் நட்சத்திரம் 4ம் பாதம்

சோகமாக இருந்த உங்களின் முகம் இனி மலர்ச்சி அடையும். அழகும் இளமையும் கூடும். புதிய வாகனம் வாங்கு வீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். லோனுக்கு மனுப்போட்டுக் காத்திருந்தது மட்டுமின்றி.. அதில் ஆயிரம் சிக்கல்களும் பிரச்சினைகளும் வந்திருந்தனதானே? எல்லாமும் சரியாப்போச்சுங்க. தன்னம் பிக்கை பிறக்கும். விலையுயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்குவீங்கப்பா. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். இத்தனை காலமாக முடிவுகள் எடுப்பதில் உங்க மனசில் இருந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். பாகப்பிரிவினை பற்றி இருந்த பிரச்சினைகளும் சண்டை சச்சரவுகளும் ஒரு ஃபுல்ஸ்டாப் வெச்சு சுமுகமாகும்.

பூசம் நட்சத்திரம்

அலைச்சலைக் குறைத்து உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். யோகா, தியானம் கை கொடுக்கும். தங்கை தம்பிகளுக்காக வேண்டிக்கொஞ்சம் அலைச்சல் இருக்கும் ஆனால் உறவு சுமுகமாக இருக்கும். பரஸ்பர நன்மைகளும் உண்டு.  குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். வீட்டுக்குத் தேவையான ஃப்ரிஜ்.. வாஷிங் மெஷின் போன்றவை வாங்குவீங்க. அலுவலக முயற்சி காரணமாகப் பணவரவு உண்டு. ஆனால், எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லதுங்க. மேலதிகாரிங்ககிட்டயும் சரி.. உங்களுக்குக் கீழே வேலை பார்ப்பவங்ககிட்டயும் சரி.. குரலை உசத்திப் பேசாமல் மென்மையாய்.. தன்மையாய்ப் போவது நல்லதுங்க. உங்க பொறுப்பை மற்றவங்க கிட்ட ஒப்படைக்காதீங்க.

ஆயில்யம் நட்சத்திரம்

வேலை பளு அதிகமாயிருக்கே.. வேறு வேலை தேட வேண்டியிருக்குமோ என்றெல்லாம் பதற்றப்படாதீங்கப்பா. நன்மையே உண்டாகும். எது பற்றியும் கவலை வேண்டாம்.  சிலருக்கு துபாய் போன்ற வெளிநாட்டில், அல்லது  அண்டை மாநிலத்தில் வேலை அமையும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த பிராமிஸ்ஸூம் செய்ய வேண்டாங்க. ஒரே சமயத்தில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்கவேண்டி வரும். சாப்பிடவும் தூங்கவும் நேரம் இருக்காது. இப்போதைக்கு அதற்கு பெரிய அளவில் பெனிஃபிட் எதுவும் இல்லைன்னு  சோர்ந்து போகாதீங்க. உங்கள் திறமையையும் உழைப்பையும் மேலிடத்தில் கவனிச்சு மார்க் போடுவாங்க. பர்சனலானா லும் சரி.. அலுவலக சம்பந்தப்பட்டதானாலும் சரி..  எந்த விஷயத்தையும் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லதுங்க.

குருப்பெயர்ச்சி பலன்களுக்கான ஆடியோ செய்தியாக கேட்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

 நாளை…. சிம்மம் ராசிக்குரிய பலன்கள்

கார்ட்டூன் கேலரி