ந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்யப் போகிறார். 12 ராசி களில் உள்ள அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களுக்கும் குருப்பெயர்ச்சி பலன்களை, எளிமையான முறையில் பிரபல ஜோதிடர் திருமதி வேதா கோபாலன், பத்திரிகை.காம் வாசகர்களுக்காக பிரத்யேகமாக கணித்துள்ளார்…

வரும் 16ந்தேதி முதல் 27ந்தேதி வரை தினசரி ஒரு ராசி வீதம் பத்திரிகை.காம் இணைய இதழில் ஆடியோ செய்தியாகவும், தனிச்செய்தியாகவும் பிரசுரமாகிறது…. 

ன்புள்ளம் கொண்ட வாசகர்களுக்கு வணக்கம்.  29.10.2019 (அதாவது விகாரி வருடம் ஐப்பசி மாதம் 12) அன்று குரு பகவான் இத்தனை காலம் குடியிருந்த விருச்சிக ராசியிலிருந்து பெயர்ந்து தனுசு ராசிக்குள் பிரவேசிக்கிறார். அது அவரின் சொந்தவீடு என்பதாலும் இத்தனை காலம் கேது மற்றும் சனி அந்த வீட்டில் இருந்து வந்ததால் ஏற்பட்டிருந்த கெடு பலன்களை தேவ குருவாகிய இவர் பெருமளவு குறைப்பார் என்பதாலும் பன்னிரண்டு ராசிகளுக்கும் நற்பலன்களே உறுதியாகக் கிடைக்கும். பொதுப்பலன்களும் நன்றாகவே இருக்கும்.

நாட்டின் நிதி நிலமை மேம்படும். இயற்கை சீற்றங்கள் குறையும். தண்ணீர்ப் பற்றாக்குறை குறையும். திருமணம் ஆகாத வர்களுக்குத் திருமணம் நடக்கும். குழந்தை பிறக்காதவர்களுக்குக் குழந்தை பிறக்கும். வேலை கிடைக்காத வர்களுக்கு வேலை கிடைக்கும். இது எல்லாம் ஏற்கனவே அமையப்பெற்றவர்களுக்குக்கூடுதல் நன்மைகள் நிகழும்.

-வேதா கோபாலன்

      

மகரம் ராசி:

உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4 ம் பாதம்

பேசும்போது கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க.  பண வரவு மற்றும் செலவு தொடர்பான விஷயங்களில் ஒவ்வொன் றையும் மிகவும் கவனமாய் ஆராய்ந்து பரிசீலித்து அப்புறமாய் எதையும் டிஸைட் செய்யுங்க. பெரிய அளவில் முதலீடு எதுவும் செய்யாமல் கவனமாக இருந்துக்குங்க. சிறிய அளவில் முதலீடு தேவைப்படும் வியாபாரங்கள் லாபம் அளிக்க சான்ஸ் இருக்குங்க. சில வழக்குகளில் தாமதம் ஏற்பட வாய்ப்புக்களும் இருக்கின்றன. எனவே மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்ளுங்கள். செலவுகளை இழுத்துப்பிடிங்க. அதிக அளவிலான பொறுப்புக்களை நீங்கள் பணிபுரியும் இடத்திலும் இல்லத்திலும் சுமக்கப் போகிறீர்கள். நீங்கள் செய்யாத காரியத்தில் கூட உங்கள் மீது பழி சுமத்தப்படும்.

மகரம் ராசி திருவோணம்  நட்சத்திரம் 

திடீர்னு ஒரு பண­வ­ரவு வந்து உங்­க சிர­மங்­களை குறைக்­கும். சந்தோஷமும் திருப்தியும் மனசில் மிகுந்­தி­ருக்­கும். நீங்க பிசினஸ் செய்பவர் என்றாலும் உத்யோகம் செய்பவர் என்றாலும், கொடுக்­கல் வாங்­க­லில் முன்­னெச்­ச­ரிக்கை  சற்று தேவைப்­ப­டுதுங்க. குடும்­பத்­தில் சந்­தோ­ஷம் நிறைஞ்சிருந்தாலும் சின்னச் சின்ன நிரடல்களை அவாய்ட் செய்ய முடியாது. பண வரவு, சுக­போ­கம் போன்ற நல்ல விஷயங்களும் கூடவே இருக்­கும். தொழில் ரீதி­யான சூழ்­நிலைகளில் கொஞ்சம் முயற்சி எடுக்க வேண்டி வரும். எதிர்பாலினத்தவர்கைள் கிட்ட எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்­டும். மற்றவர்களின் ஃபேமிலி பிரச்­னை­க­ளில் தலை­யிட வேணாங்க. பொறு­மை­யு­டன் செயல்­ப­டு­வது உத்­த­மம். உங்­க முயற்­சி­கள் அனைத்­தும் வெற்றி பெறும்.

மகரம் ராசி திருவோணம்  நட்சத்திரம் பாதம் 1, 2

மகன், மகள் மூலம் குடும்­பத்­தில் மகிழ்ச்சி நில­வும். அலுவலகம் சார்ந்த எதிரிங்க விஷயத்தில் கொஞ்சமாச்சும் முன்­னெச்­ச­ரிக்கை­யுடன்        செயல்­ப­டுங்­க.. தேக ஆரோக்­யத்­தில் சற்று கவ­னம் தேவை. சுப­கா­ரிய முயற்­சி­க­ளில் முன்­னேற்­றம் வரும். குடும்ப பிரச்­னை­க­ளில் அனு­ச­ரித்­துப்­போ­வது உத்­த­மம். ஏ…கப்பட்ட செலவுங்க இருக்கு. ஆனால் பாதி வீட்டில் நடக்கவிருக்கும் சுப நிகழ்ச்சி காரணமாய்த்தான் இருக்கப்போகுது. நண்பர்கள் மற்றும் உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீங்க. சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புதுப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீங்க.

குருப்பெயர்ச்சி பலன்களுக்கான ஆடியோ செய்தியாக கேட்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

https://www.youtube.com/watch?v=Ku41h5uerFQ&feature=youtu.be

 

 நாளை.. கும்பம்….. ராசிக்குரிய பலன்கள்