நட்சத்திரம் வாரியாக குருப்பெயர்ச்சி பலன்கள்: மிதுனம் ராசி! வேதாகோபாலன் (ஆடியோ)

ந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்யப் போகிறார். 12 ராசி களில் உள்ள அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களுக்கும் குருப்பெயர்ச்சி பலன்களை, எளிமையான முறையில் பிரபல ஜோதிடர் திருமதி வேதா கோபாலன், பத்திரிகை.காம் வாசகர்களுக்காக பிரத்யேகமாக கணித்துள்ளார்…

வரும் 16ந்தேதி முதல் 27ந்தேதி வரை தினசரி ஒரு ராசி வீதம் பத்திரிகை.காம் இணைய இதழில் ஆடியோ செய்தியாகவும், தனிச்செய்தியாகவும் பிரசுரமாகிறது…. 

ன்புள்ளம் கொண்ட வாசகர்களுக்கு வணக்கம்.  29.10.2019 (அதாவது விகாரி வருடம் ஐப்பசி மாதம் 12) அன்று குரு பகவான் இத்தனை காலம் குடியிருந்த விருச்சிக ராசியிலிருந்து பெயர்ந்து தனுசு ராசிக்குள் பிரவேசிக்கிறார். அது அவரின் சொந்தவீடு என்பதாலும் இத்தனை காலம் கேது மற்றும் சனி அந்த வீட்டில் இருந்து வந்ததால் ஏற்பட்டிருந்த கெடு பலன்களை தேவ குருவாகிய இவர் பெருமளவு குறைப்பார் என்பதாலும் பன்னிரண்டு ராசிகளுக்கும் நற்பலன்களே உறுதியாகக் கிடைக்கும். பொதுப்பலன்களும் நன்றாகவே இருக்கும்.

நாட்டின் நிதி நிலமை மேம்படும். இயற்கை சீற்றங்கள் குறையும். தண்ணீர்ப் பற்றாக்குறை குறையும். திருமணம் ஆகாத வர்களுக்குத் திருமணம் நடக்கும். குழந்தை பிறக்காதவர்களுக்குக் குழந்தை பிறக்கும். வேலை கிடைக்காத வர்களுக்கு வேலை கிடைக்கும். இது எல்லாம் ஏற்கனவே அமையப்பெற்றவர்களுக்குக்கூடுதல் நன்மைகள் நிகழும்.

-வேதா கோபாலன்

மிதுனம் ராசி

மிருக சீர்ஷம் நட்சத்திரம் பாதம் 3, 4

கடன்கள் மடமடன்னு அடையும். கல்யாணம் எப்பதான் ஆகுமோன்னு சலிச்சுப்போயிருந்தீங்க. ஆனால் இதோ.. வேளை வந்தாச்சுங்க. பூர்வீக சொத்து கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். எப்பப்பாரு அவங்களோ ஃபைட் பண்ணிக்கிட்டே இருக்காதீங்க. பாவம். பிழைச்சுப்போகட்டும். விட்ருங்க. திடீர் லாபங்கள் அதிகரிக்குங்க.  உங்களுக்கு மட்டுமில்லாமல் உங்க லைஃப் பார்ட்டனருக்குக்கும்கூட இத்தனை காலம் இருந்து வந்த டென்ஷன்கள் குறையும். குடும்பப் பிரச்சினையில்.. குறிப்பாகக் கணவன் மனைவிக்கிடையில் அன்னியர்களை என்டர் பண்ண அலவ் பண்ணாதீங்கப்பா.

திருவாதிரை நட்சத்திரம்

மனஇறுக்கங்கள் குறைவதால் நிம்மதி அதிகமாகும். குடும்பத்தில் அமைதி அதிகமாகும். வீடு கட்டும் பணி  அரைகுறையா நின்னுக்கிட்டிருந்ததா? அதை இப்ப தொடங்குவீர்கள். தொடர்வீங்க. அது மட்டுமில்லீங்க… தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.  அதுவும் உங்களுக்கு ஏற்கனவே அந்த வாய்ப்பு வந்து தட்டிப்போயிருந்த தல்லவா? இனி தடை இல்லை. வியாபாரத்தில் பழைய தவறுகள் நிகழ்ந்து விடாமல் பார்த்துக்கொள்வீங்க என்பதால் நஷ்டம் குறைம்.  தரமான பொருள்களை விற்பனை செய்வதன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். கடன் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலியுங்கள். எடுத்த எடுப்பில் உணர்ச்சி வசப்பட்டு சத்தம் போடாதீங்கப்பா. இருக்கின்ற இடத்திலேயே உத்யோகத்தைத் தொடர்வது நல்லது. இப்போது மாறுவது பற்ற யோசிக்க வேணாங்க.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்

இரும்பு, கடல் உணவுகள், ஹோட்டல் மற்றும் ரசாயன வகைகள் சார்ந்த வியாபாரம் அல்லது உத்யோகத்தில் உள்ளவங்களுக்கு லாபம் / சம்பளம் அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் உண்டுங்க. அதாவது பென்ஷன் போன்றவை தாமதமாகியிருந்தாலும், பாஸ்போர்ட் விசா போன்றவை வராமல் இருந்தாலும் அவை உடனே கிடைக்கும். பிதுரார்ஜித சொத்து சம்பந்தமான வழக்கில் வெற்றிபெறுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். அக்கம்பக்கத்தினருடனான பேச்சுவார்த்தை எதிலும் கவனமாகச் செயல்பட வேண்டும். மகளின்/ மகனின் திருமணத்துக்காக கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.   அதனால் என்னங்க. இந்தச் சுப நிகழ்ச்சி வராதான்னு எத்தனை காலமாய் ஏங்கித் தவமிருந்து காத்துக்கிட்டிருந்தீங்க.

மிதுனம் ராசிக்கான பலன்களுக்கான ஆடியோ செய்தியாக கேட்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

https://www.youtube.com/watch?v=WgaTZ6NJeTc&feature=youtu.be

 

 நாளை…. கடகம்  ராசிக்குரிய பலன்கள்

கார்ட்டூன் கேலரி