நட்சத்திரம் வாரியாக குருப்பெயர்ச்சி பலன்கள்: சிம்மம் ராசி! வேதாகோபாலன் (ஆடியோ)

ந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்யப் போகிறார். 12 ராசி களில் உள்ள அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களுக்கும் குருப்பெயர்ச்சி பலன்களை, எளிமையான முறையில் பிரபல ஜோதிடர் திருமதி வேதா கோபாலன், பத்திரிகை.காம் வாசகர்களுக்காக பிரத்யேகமாக கணித்துள்ளார்…

வரும் 16ந்தேதி முதல் 27ந்தேதி வரை தினசரி ஒரு ராசி வீதம் பத்திரிகை.காம் இணைய இதழில் ஆடியோ செய்தியாகவும், தனிச்செய்தியாகவும் பிரசுரமாகிறது…

ன்புள்ளம் கொண்ட வாசகர்களுக்கு வணக்கம்.  29.10.2019 (அதாவது விகாரி வருடம் ஐப்பசி மாதம் 12) அன்று குரு பகவான் இத்தனை காலம் குடியிருந்த விருச்சிக ராசியிலிருந்து பெயர்ந்து தனுசு ராசிக்குள் பிரவேசிக்கிறார். அது அவரின் சொந்தவீடு என்பதாலும் இத்தனை காலம் கேது மற்றும் சனி அந்த வீட்டில் இருந்து வந்ததால் ஏற்பட்டிருந்த கெடு பலன்களை தேவ குருவாகிய இவர் பெருமளவு குறைப்பார் என்பதாலும் பன்னிரண்டு ராசிகளுக்கும் நற்பலன்களே உறுதியாகக் கிடைக்கும். பொதுப்பலன்களும் நன்றாகவே இருக்கும்.

நாட்டின் நிதி நிலமை மேம்படும். இயற்கை சீற்றங்கள் குறையும். தண்ணீர்ப் பற்றாக்குறை குறையும். திருமணம் ஆகாத வர்களுக்குத் திருமணம் நடக்கும். குழந்தை பிறக்காதவர்களுக்குக் குழந்தை பிறக்கும். வேலை கிடைக்காத வர்களுக்கு வேலை கிடைக்கும். இது எல்லாம் ஏற்கனவே அமையப்பெற்றவர்களுக்குக்கூடுதல் நன்மைகள் நிகழும்.

-வேதா கோபாலன்

சிம்மம் ராசி

மகம் நட்சத்திரம்

முக்கியக் கோப்புகளைக் கையாளும் போது அலட்சியம் வேண்டாம். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுங்கப்பா. எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குறிப்பாகக் குழந்தைங்களின் படிப்பு கல்யாணம் போன்ற விஷயங்களுக்கு அநாயாசமாகப் பணம் கிடைக்கும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். சொத்து சேரும். தாயாருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். புதிய வீட்டில் குடியேறுவீங்க. கணவன் மனைவி ஒருவருக் கொருவர் மனம்விட்டுப் பேசி முக்கிய முடிவுகள் எடுப்பீங்க. நவீன டைப் வாகனம், செல்போன் அல்லது லாப் டாப் போன்ற பொருட்கள் வாங்குவீர்கள். குழந்தைங்களுக்கான கல்யாண முயற்சிகள் ஒரு வழியாய் முடிவுக்கு வந்து பலிதமாகும். மொத்தத்திலேயே  தள்ளிப்போன காரியங்களெல்லாம் நல்லவிதமாக முடியும்.

பூரம் நட்சத்திரம்

உங்களின் பலவீனங்களைப் பட்டியலிட்டு அவற்றையெல்லாம் மாற்றிக்கொள்வீர்கள். இதற்கு வழிகாட்டியாக உங்கள் ஆசான் போன்ற யாராவது உதவுவாங்க. சில விஷயங்களில் பெருந்தன்மையான முடிவுகள் எடுப்பீங்க. பயணங்களால் ஆதாயம் உண்டு. ஆனால் அந்த நன்மை உடனடியாகத் தெரிய வராமல் சற்றே இழுத்தடிச்சுத் தாமதமாகத் தெரிய வரும். எனவே.. பொறுமை அணிந்து கொள்வது நல்லதுங்க. விலகிச்சென்ற உறவினர்கள் வலியவந்து பேசத் தொடங்குவார்கள். மன்னிச்சு ஏற்றுக்கொள்வது பெட்டர். பிகாஸ்.. அவங்களால உதவி உண்டு. அலுவலகத்தில்  காணாமல்போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். மனசில் நிம்மதி  வந்து உட்காரும். நீங்க பிசினஸ் செய்பவராங்க? எனில்  வியாபாரத்தைக் கடன் வாங்கி  விரிவுபடுத்த  வேண்டாம். கையில் ஐவேஜ் இருந்தா என்ன வேணும்னாலு செய்ங்க. லோன்? மூச்..

உத்திரம் பாதம் 1

பிசினஸ்காரங்க … கமிஷன், ரியல் எஸ்டேட், பெட்ரோ, கெமிக்கல், மூலிகை வகைகளால் லாபமடைவீர்கள். ஆனால் சும்மா இல்லீங்கோ. கடுமையா உழைச்சுத்தான். வேலைச்சுமை இருக்கும். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்த மாட்டவே மாட்டீங்க. நேரம் காலம் பார்க்காமல் உழைத்தும் பயன் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். புதிய அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். உயர்கல்வியில் கவனம் செலுத்திப் படிக்க வேண்டிய முக்கியமான காலகட்டம் இது. டைவர்ட் ஆகாமல் படிங்க.  எதிர்காலம் பற்றி நல்லா யோசித்து .. நலம் நாடுபவர்களை கன்சல்ட் செய்து.. முடிவெடுங்கள். பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர் அதிகாலையில் அலாரம் வைச்சு எழுந்து படிக்கத் தவறாதீர்கள். விருப்பப்பட்ட பிரிவில் சேர போராடவேண்டியிருக்கும்.

சிம்மம்  ராசிக்கான பலன்கள்-… ஆடியோ செய்தியாக கேட்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

 

 நாளை…. கன்னி  ராசிக்குரிய பலன்கள்

கார்ட்டூன் கேலரி