நட்சத்திரம் வாரியாக குருப்பெயர்ச்சி பலன்கள்: துலாம் ராசி! வேதாகோபாலன் (ஆடியோ)

ந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்யப் போகிறார். 12 ராசி களில் உள்ள அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களுக்கும் குருப்பெயர்ச்சி பலன்களை, எளிமையான முறையில் பிரபல ஜோதிடர் திருமதி வேதா கோபாலன், பத்திரிகை.காம் வாசகர்களுக்காக பிரத்யேகமாக கணித்துள்ளார்…

வரும் 16ந்தேதி முதல் 27ந்தேதி வரை தினசரி ஒரு ராசி வீதம் பத்திரிகை.காம் இணைய இதழில் ஆடியோ செய்தியாகவும், தனிச்செய்தியாகவும் பிரசுரமாகிறது…. 

ன்புள்ளம் கொண்ட வாசகர்களுக்கு வணக்கம்.  29.10.2019 (அதாவது விகாரி வருடம் ஐப்பசி மாதம் 12) அன்று குரு பகவான் இத்தனை காலம் குடியிருந்த விருச்சிக ராசியிலிருந்து பெயர்ந்து தனுசு ராசிக்குள் பிரவேசிக்கிறார். அது அவரின் சொந்தவீடு என்பதாலும் இத்தனை காலம் கேது மற்றும் சனி அந்த வீட்டில் இருந்து வந்ததால் ஏற்பட்டிருந்த கெடு பலன்களை தேவ குருவாகிய இவர் பெருமளவு குறைப்பார் என்பதாலும் பன்னிரண்டு ராசிகளுக்கும் நற்பலன்களே உறுதியாகக் கிடைக்கும். பொதுப்பலன்களும் நன்றாகவே இருக்கும்.

நாட்டின் நிதி நிலமை மேம்படும். இயற்கை சீற்றங்கள் குறையும். தண்ணீர்ப் பற்றாக்குறை குறையும். திருமணம் ஆகாத வர்களுக்குத் திருமணம் நடக்கும். குழந்தை பிறக்காதவர்களுக்குக் குழந்தை பிறக்கும். வேலை கிடைக்காத வர்களுக்கு வேலை கிடைக்கும். இது எல்லாம் ஏற்கனவே அமையப்பெற்றவர்களுக்குக்கூடுதல் நன்மைகள் நிகழும்.

-வேதா கோபாலன்

       

துலாம் ராசி

சித்திரை நட்சத்திரம் 3, 4 பாதங்கள்

போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீங்க. அதில் நீங்களே எதிர்பார்க்காத மார்க் கிடைக்கும். காலேஜில்கூட நீங்க இத்தனை காலம் வாங்கிக்கிட்டிருந்த  மதிப்பெண் உயரும். கலைத்துறையினர் இனி துளிர்த்தெழுந்து சந்தோஷ நடை போடுவார்கள். ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதுடன் வெற்றி நடைதான் போங்க. வேலை தேடிக்கொண்டிருந்தவங்களுக்குப் பெரிய நிறுவனங்களின் அழைப்பு தேடி வரும். ஆலோசித்து.. விசாரித்துத் தீர்மானம் செய்ங்க. நீங்க கலைத்துறையைச் சேர்ந்தவர் என்றால் பட்டிதொட்டியெங்கும் பாராட்டுக் கிடைக்கும். என்ஜாய். வேலைச்சுமையும் அலைச்சலும் இருக்கும். அதனால் பரவாயில்லைங்க. சம்பளமும் மோசம் இல்லை. அரசு அனுமதி கிடைத்து சிலர் புதிதாக வீடு கட்டத் தொடங்குவீங்க.

ஸ்வாதி நட்சத்திரம்

உறவினர்கள், நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். சில உறவுகளை பலப்படுத்த மத்தியஸ்தம் செய்து பாராட்டுப் பெறுவீங்க. பட்… அதே சமயம்.. கணவன் மனைவிக்குள் வரும் சிறு பிரச்னைகளைப் பெரிதாக்க வேண்டாம். பெற்றோரிடம் புகார் சொல்ல வேண்டாம். பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு காட்டாதீர்கள். எல்லாம் போகப்போகச் சரியாகும்.  மகளுக்கு வரன் தேடும்போது நன்றாக விசாரித்து முடிப்பது நல்லதுங்க. எஸ்பெஷலி அது காதல் கல்யாணம் என்றால் கேட்கவே வேண்டாம். மேலும் அதிகக் கவனம் தேவை. சொத்து ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அநாவசியமாக யாரிடமும் வாக்குறுதி தர வேண்டாம்.. அதாவது எங்கும் எதிலும் சற்று அதிகக் கவனமாய் இருந்துடுங்க என்கிறேன்.

விசாகம் நட்சத்திரம் 1, 2, 3, பாதங்கள்

இத்தனை காலமாய் டென்ஷன் குடுத்துக்கிட்டிருந்த தாயாரின் உடல்நிலை சீராகும். பழைய வீட்டில் பிரச்சினைகளைச் சந்திச்சீங்கதானே. இனி டோன்ட் ஒர்ரி. நல்ல வீட்டுக்கு மாறுவீங்க.  சிலர் வேறு ஊருக்குக் குடிபெயர்வீங்க. பழைய கடனில் ஒரு பகுதியையாவது பைசல் செய்ய வழி கிடைக்கும். அல்லது முழுவதுமே குடுத்துத் தீர்க்கவும் வாய்ப்பிருக்குங்க. ஆயுள், ஆரோக்கியம் கூடும். தந்தை வழி சொத்துகள் சம்பந்தமான வழக்குகள் உங்களுக்குச் சாதகமாகவே முடிவுக்கு வரும். ஒருபக்கம் அலைச்சல் இருந்தாலும் முன்னேற்றம் உண்டு. பணவரவு நிச்சயமாய்க் குறையாதுங்க. எழுத்தாளர் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்தவங்களுக்குப் புகழ், கௌரவம் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. தவிரவும் அரசியல்வாதிகளுக்கும் நல்லவேளை வந்தாச்சு.  இது வரை நிம்மதியைக் குலைத்துக்கொண்டிருந்த  சொத்துச் சிக்கல் ஒரு முடிவுக்கு வரும்.

குருப்பெயர்ச்சி பலன்களுக்கான ஆடியோ செய்தியாக கேட்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

 

 நாளை.. விருச்சிகம்  ராசிக்குரிய பலன்கள்

கார்ட்டூன் கேலரி