நட்சத்திரம் வாரியாக குருப்பெயர்ச்சி பலன்கள்: விருச்சிகம் ராசி! வேதாகோபாலன் (ஆடியோ)

ந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்யப் போகிறார். 12 ராசி களில் உள்ள அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களுக்கும் குருப்பெயர்ச்சி பலன்களை, எளிமையான முறையில் பிரபல ஜோதிடர் திருமதி வேதா கோபாலன், பத்திரிகை.காம் வாசகர்களுக்காக பிரத்யேகமாக கணித்துள்ளார்…

வரும் 16ந்தேதி முதல் 27ந்தேதி வரை தினசரி ஒரு ராசி வீதம் பத்திரிகை.காம் இணைய இதழில் ஆடியோ செய்தியாகவும், தனிச்செய்தியாகவும் பிரசுரமாகிறது…. 

ன்புள்ளம் கொண்ட வாசகர்களுக்கு வணக்கம்.  29.10.2019 (அதாவது விகாரி வருடம் ஐப்பசி மாதம் 12) அன்று குரு பகவான் இத்தனை காலம் குடியிருந்த விருச்சிக ராசியிலிருந்து பெயர்ந்து தனுசு ராசிக்குள் பிரவேசிக்கிறார். அது அவரின் சொந்தவீடு என்பதாலும் இத்தனை காலம் கேது மற்றும் சனி அந்த வீட்டில் இருந்து வந்ததால் ஏற்பட்டிருந்த கெடு பலன்களை தேவ குருவாகிய இவர் பெருமளவு குறைப்பார் என்பதாலும் பன்னிரண்டு ராசிகளுக்கும் நற்பலன்களே உறுதியாகக் கிடைக்கும். பொதுப்பலன்களும் நன்றாகவே இருக்கும்.

நாட்டின் நிதி நிலமை மேம்படும். இயற்கை சீற்றங்கள் குறையும். தண்ணீர்ப் பற்றாக்குறை குறையும். திருமணம் ஆகாத வர்களுக்குத் திருமணம் நடக்கும். குழந்தை பிறக்காதவர்களுக்குக் குழந்தை பிறக்கும். வேலை கிடைக்காத வர்களுக்கு வேலை கிடைக்கும். இது எல்லாம் ஏற்கனவே அமையப்பெற்றவர்களுக்குக்கூடுதல் நன்மைகள் நிகழும்.

-வேதா கோபாலன்

    

விருச்சிகம் ராசி

விசாகம் நட்சத்திரம் 4ம் பாதம்

வருமானம் உயரும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் தொடர்பான முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தினருடன் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பயணத்தில் கவனமாக இருங்கள். குறிப்பாகப் பொருட்களை ஜாக்கிரதையாப் பார்த்துக்குங்க. சாப்பிடவும் தூங்கவும் நேரம் இல்லாமல் ஓடு ஓடுன்னு ஓடுவீங்க. உழைப்பீங்க. போதாக்குறைக்குப் பயணங்கள் வேறு மேற்கொள்ள வேண்டி வரும். பெண்களுக்கு கர்பப் பை சம்பந்தமான சிறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரம்பத்திலேயே மருத்துவ உதவியை நாடுங்க. பெரிய பிரச்சினையாகாமல் தவிர்க்கலாம்.. மகன்/ மகள் வாழ்வில் வளம் பெருகி ஒளி திகழும்.

அனுஷம் நட்சத்திரம்

கோபத்தைக் குறைச்சுக்குங்க. அவசர பதில்களையும் வாக்குவாதங்களையும் குறைச்சுக்கிட்டு நிதானமாகவும் மென்மையாகவும் பதில் சொல்லுங்க. குறிப்பாய் மேலதிகாரிங்க.. ஆசிரியர்கள் இவங்க கிட்ட டபுள் கவனமாய் இருங்க. குறைஞ்சு போயிடமாட்டீங்க. பணிச்சுமை பாட்டுக்கு இருந்துகொண்டேதாங்க இருக்கும். புதிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுங்க. வியாபாரத்தில் சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். அவை நல்ல அனுபவங்கள் பொல்லாத அனுபவங்கள் என மிக்ஸ் ஆகிக்கிடைக்கும். வியாபாரீஸ்.. நீங்க தேங்கிக் கிடந்த சரக்கு களைத் தள்ளுபடி விலைக்கு விற்று முடிப்பீர்கள். புகழ்பெற்ற நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களோட திறமைகளை வெளிப்படுத்த, புதிய வாய்ப்பு கிடைக்கும். நல்லபடியாப் பயன்படுத்திப்பீங்க..

கேட்டை நட்சத்திரம்

குடும்பத்திலாகட்டும்.. அலுவலகத்திலாகட்டும்.. ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துபோட்டுப் பார்க்கவேண்டி வரும். சளைக்காம செய்யறீங்க. அதுதான் உங்க பிளஸ் பாயின்ட். கூடிய சீக்கிரத்தில் பதவி உயர்வை எதிர்பார்க்கலாம்; பழைய சம்பள பாக்கி கைக்கு வரும். ஹப்பாடா. எவ்ளோ காலம் இதுக்காகக் காத்துக்கிட்டு இருந்தீங்க. இப்ப ஹாப்பீயா??  செலவுகள் கட்டுப்படும். வருமானம் அதிகரிக்கும். உங்களின் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும், காதல் திருமணம் கைகூடும். திருமணம் ஆனவர் என்றால் கணவன் மனைவிக்குள் இனிய ஒற்றுமை நிலவும். அதிருஷ்ட தேவதை உங்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் புன்னகைப்பாள். எல்லாம் மெதுமெதுவாப் போகுதுன்னு குறைப்பட்டுக்கிட்டீங்களே. இப்ப சரியாப்போச்சா? இனி கவலையில்லைங்க.

குருப்பெயர்ச்சி பலன்களுக்கான ஆடியோ செய்தியாக கேட்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

https://www.youtube.com/watch?v=chV-LEnYWLc&feature=youtu.be

 நாளை.. தனுசு ராசிக்குரிய பலன்கள்

கார்ட்டூன் கேலரி