குருகிராம்:

ரை குறை ஆடைகள் அணிந்து மாலுக்கு வந்த இளம்பெண்களை பார்த்த சராசரி பெண் ஒருவர், இதுபோன்ற உடைகளால்தான்  பாலியல் வன்கொடுமை பெருகுகிறது என்று குற்றம் சாட்டிய நிலையில், இதுவே  ரேப் செய்வதற்கும் காரணமாக அமைகிறது என்று கடுமையாக  எச்சரித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சம்பவத்தன்று  அரியானா மாநிலத்தில் குருகிராமில் உள்ள ஒரு மாலுக்கு சில இளம்பெண்கள் குட்டை பாவாடையுடன் கவர்ச்சியாக உடை அணிந்து வந்துள்ளனர். இதைப் பார்த்த நடுத்தர வயதுடைய பெண், அந்த இளம்பெண்களை அழைத்து,  ஆண்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக  இப்படி குட்டை பாவாடை அணிந்து கொண்டு வருகின்றீர்களா என்று சாடினார். மேலும், இதன் காரணமாகவே  பாலியல் வன்கொடுமை பெருகுவதாக தெரிவித்தவர், இவர்களும் ரேப் செய்ய ஏற்றவர்கள் என்று கடுமையாக சாடினார். இதற்கு அநதஇளம்பெண்கள் நீங்கள் பேசியதற்கு மன்னிப்பு கேளுங்கள் என்று கூற அதற்கு மறுத்த அந்த பெண், இளம்பெண்களுக்கு அவரது பெற்றோர்கள் சரியானபடி உடை அணிய அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் பெண்ணியியக்க வாதிகள் கடுமையாக  சாடி வருகின்றனர்.

சமீப காலமாக நாடு முழுவதும் அதிகரித்துவரும் பாலியல் வன்முறைக்கு நவீன டிஜிட்டல் யுகத்தை ஒரு தரப்பினர் காரணமாக சொன்னாலும், மற்றொரு தரப்பினரும்,  பெண்கள் உடுத்தும் உடை குறித்தும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், பெண்ணியக்கவாதிகளோ, உடை உடுத்துவது தங்களது உரிமை, சுதந்திரம் என்று குரல் கொடுத்து வருகின்றனர். இதன் தாக்கம் தற்போது இளம்பெண்கள் உள்ளாடையுடன் அலையும் அவலம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பாலியல் வன்புணர்வு போன்ற குற்றச் சம்பவங்களும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.