குட்கா வழக்கு: உணவுப் பாதுகாப்பு அதிகாரி சிவகுமாரை விசாரிக்க சிபிஐக்கு அனுமதி

சென்னை:

குட்கா வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள  உணவுப் பாதுகாப்பு அதிகாரி சிவகுமாரை அக்.1 வரை  சிபிஐ விசாரிக்க  நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

குட்கா ஊழல் வழக்கில் மாதவராவ் உள்பட  5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 6வது நபராக  உணவுப் பாதுகாப்பு அதிகாரி சிவகுமார் கைது செய்யப்பட்டு உள்ளார்.

குட்கா ஊழல்  குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதி மன்றம் மாற்றியதை தொடர்ந்து அதிரடி சோதனை நடத்திய சிபிஐ மும்முரமாக விசாரணை நடத்தி வருகிறது.  இந்த விவகாரத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினர் என பல தரப்புகள் சிக்கி உள்ள நிலையில், தற்போது உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் சிபிஐ விசாரணை நடத்த உள்ளது.

ஏற்கனவே குட்கா ஊழல் காரணமாக மாதவராவ் உள்ளிட்ட 5 பேர் கடந்த 7-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற நிலையில், 6வதாக கைது செய்யப்பட்ட சிவகுமாரிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.

இன்று முதல் வருகின்ற திங்கள் கிழமை 10 மணி வரை  விசாரணை நடத்த சிபிஐ க்கு அனுமதி அளித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி