சென்னை,

குட்கா விவகாரத்தில் சட்டமன்ற உரிமைக்குழு நோட்டீசுக்கு பதில் அளிக்கும் காலக்கெடு இன்றுடன் முடிவடைவதால், திமுக எம்எல்ஏக்கள் 21 பேர் இன்று சபாநாயகர் தனபாலை சந்தித்து விளக்கம் கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

குட்கா விவகாரத்தில் ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் உத்தரவிட்டுள்ளது, திமுகவுக்கு எதிரான சதி என்று  திமுக கூறியிருந்தது.

மேலும், இந்த விவகாரம் குறித்து சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 19ந்தேதி சட்டமன்ற பேரவை கூட்டத்தின்போது, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தின்பொழுது தடை செய்யப்பட்ட குட்காவை பேரவைக்குள் கொண்டு வந்தனர். இந்த விவகாரத்தில்   தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது உரிமை மீறல் புகார் எழுந்தது.

இந்நிலையில்,சட்டப்பேரவை உரிமை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி,  பேரவைக்கு குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்க கூறி மு.க. ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்டது.

இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேர், சபாநாயகர் தனபாலை சந்தித்து, உரிமைக்குழு நோட்டீஸ் தொடர்பாக இன்று விளக்கம் அளிக்க உள்ளனர்.

அப்போது  மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று சந்தித்து எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.