குட்கா விவகாரம்: சபாநாயகர் நோட்டீஸ்! சதி என்கிறது  என்கிறது தி.மு.க

சென்னை,

குட்கா விவகாரத்தில் ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்எல்ஏக்களுக்க நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் உத்தரவிட்டுள்ளது, திமுகவுக்கு எதிரான சதி என்று அக்கட்சி கருத்து தெரிவித்து உள்ளது.

இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் கூறியுள்ளது.

கடந்த ஜூலை 19ந்தேதி சட்டமன்ற பேரவை கூட்டத்தின்போது, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தின்பொழுது தடை செய்யப்பட்ட குட்காவை பேரவைக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விவகாரத்தில்   தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது உரிமை மீறல் புகார் எழுந்தது.

இந்நிலையில், நேற்று சட்டப்பேரவை உரிமை குழு கூட்டம் நடைபெற்றது. , தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை உரிமைக்குழு கூட்டம் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் தொடங்கி நடைபெற்றது.

அதில், பேரவைக்கு குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்க கூறி மு.க. ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது என உரிமை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த நோட்டீசுக்கு  ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தி.மு.க,  “நோட்டீஸ் அனுப்பியதில் சதி உள்ளது. இது குறித்து சட்டரீதியிலான நடவடிக்கை மேற்கொள்வோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி