குட்கா 40கோடி லஞ்சம்: சிபிஐ விசாரணை அவசியம்? ஐகோர்ட்டு

சென்னை,

பான் மசாலா, குட்கா 40கோடி லஞ்ச விவகாரத்தில், சிபிஐ விசாரணை அவசியம் என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது.

தடை செய்யப்பட்ட பான் மாலா,  :’குட்கா’ உள்ளிட்ட போதைப் பொருட்கள்  தமிழகத்தில் திருட்டுத்தனமாக விற்பனை செய்வதற்காக,  விற்பனையாளர்களிடம், ரூ.40 கோடி வரை  லஞ்சம் பெற்ற விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜே.அன்பழகன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று ஐகோர்ட்டின் முதல்பெஞ்சு முன் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது, அரசு வழக்கறிஞர் விசாரணைக்கு வர தாமதமானதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  இந்த வழக்கில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் தொடர்பு இருப்பதால் சிபிஐ விசாரணை அவசியம் என கருத்து தெரிவித்தனர்.

மேலும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வாதத்திற்காக வழக்கு விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்படுள்ளது.

குட்கா ஊழல்… ஒரு பார்வை…

தமிழகத்தில் குட்கா, பான்மசாலா விற்பனை செய்த அப்போதை முதல்வர் ஜெயலலிதா 2013ம் ஆண்டு தடை விதித்தார். ஆனால், தடையை மீறி தமிழகம் முழுவதும் குட்கா, பான் மசாலா விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து வருமான வரித்துறை மத்தியஅரசுக்கு கடிதம் எழுதியது. அதில், தமிழகத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனையின்போது கைப்பற்றப்பட்ட டைரியில் இருந்த தகவல்களை தொடர்ந்து, தடை செய்யப்பட்ட பான் மாலா,  :’குட்கா’ உள்ளிட்ட போதைப் பொருட்கள்  தமிழகத்தில் திருட்டுத்தனமாக விற்பனை செய்வதற்காக,  விற்பனையாளர்களிடம், ரூ.40 கோடி வரை  லஞ்சம் பெற்றதாகவும்,

இந்த லஞ்ச விவகாரத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் சென்னை கமிஷனர் ஜார்ஜ் உள்பட சுகதாரத்துறை, காவல்துறை அதிகாரிகள் தொடர்பு குறித்தும் கடிததத்தில் கூறப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் பெற்ற லஞ்ச விவரம் குறித்தும் கூறப்பட்டிருந்தது.

இந்த கடிதம் குறித்து நிதி அமைச்சகத்துக்கும், ஊழல் தடுப்பு துறைக்கும் தெரிவித்திருந்தது.

மத்தியஅரசு இந்த கடிதத்தை தமிழக தலைமைசெயலாருக்கு அனுப்பி, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது.

ஆனால், தமிழக தலைமைசெயலாளர் அந்த கடிதத்த கிடப்பில் போட்டுவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில்  நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் குட்கா, பான்மசாலாவில் ரூ.40 கோடி லஞ்சம் பெறப்பட்டது குறித்து  சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

ஆனால், அதற்கு  பதிலளித்த முதல்வர் எடப்பாடி, இந்த விவகாரத்தில்  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை விசாரணை நடத்தி வருகிறது எனக்கூறினார் பிரச்சினையை முடித்து வைத்தார்.

இதற்கிடையில் குட்கா ஊழலில் சம்பந்தம் உள்ளதாக கூறப்பட்ட   டிஜிபி யாக டி.கே.ராஜேந்திரனை தமிழக அரசு மீண்டும் பதவி நீட்டிப்பு செய்தது.

இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.ஆனால், மதுரை ஐகோர்ட்டு, டி.கே.ராஜேந்திரன் பதவி நீட்டிப்பு செல்லும் என்று கடந்த வாரம் தீர்ப்பு கூறியிருந்தது. மேலும், புகாரை விசாரிக்க  லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் தலைமையில் ஆணையம் அமைக்க வேண்டும் என்றும், இரண்டு வாரத்திற்குள் ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் தலைமை செயலாளருக்கு மதுரை உயர்நிதி மன்ற கிளை உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், திமுகவை சேர்ந்த ஜெ.அன்பழகன்  சென்னை ஐகோர்ட்டில், குட்கா பேர விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு பெஞ்ச,  இந்த வழக்கில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் தொடர்பு இருப்பதால் சிபிஐ விசாரணை அவசியம் என கருத்து தெரிவித்துள்ளது.

இதன் விரிவான விசாரணை இன்று பிற்பகல் நடைபெற உள்ளது. சென்னை ஐகோர்ட்டின் சிபிஐ விசாரணை அவசியம் என்ற கருத்து, இந்த ஊழலில் தொடர்புடைய அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது.