Random image

குட்கா வழக்கு: கைது செய்யப்பட்ட 5 பேரில் 2 பேர் ஜாமின் கேட்டு வழக்கு

சென்னை:

மிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள  குட்கா வழக்கில் சிபிஐ 5 பேரை கைது செய்துள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்த 4 நாட்களில் போலீஸ் காவலில் எடுத்துள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.‘

குட்கா முறைகேட்டில் காவல் அதிகாரிகளுக்கு குட்கா வியாபாரி லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்துள்ளதாக  புகார் எழுந்தது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலை யில்,  குட்கா  குடோன் அதிபர் மாதவராவ், அவரது தொழில் கூட்டாளிகளான பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ் ஆகியோரும், அதிகாரிகளான செந்தில் முருகன், பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து சிபிஐ  விசாரித்து வருகிறது.

இந்நிலையில் பாண்டியன், செந்தில் முருகன் ஆகியோர் ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கிடையில்  குட்கா ஊழல் சம்பந்தமாக டிஎஸ்பி மன்னர் மன்னன், காவல் ஆய்வாளர் சம்பத் ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.