Random image

குட்கா வழக்கு: முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் விளக்கம்

சென்னை:

டை செய்யப்பட்ட குட்கா தமிழகத்தில் விற்பனை செய்யப்பட முறைகேடாக அனுமதி அளித்த விவகாரத்தில், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

குட்கா முறைகேடு வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக அதிரடி சோதனை நடத்தினார். இந்த சோதனையின்போது,   தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் உள்பட சுகாதாரத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள்வீடுகள் உள்பட 40 இடங்களில் சோதனை நடைபெற்றது.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ரெய்டின்போது, முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் இல்லத்தில் இருந்து ஏராளமான ஆவனங்களை சிபிஐ அதிகாரிகள் எடுத்துச்சென்றதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் தனது நொளம்பூர் இல்லத்தில், ஜார்ஜ் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அப்போது, தான் 33 ஆண்டுகளாக காவல்துறையில் சிறப்பான சேவையாற்றி பணியை முடித்துள்ளேன் குட்கா விவகாரம் விசாரணையில் இருப்பதால் நான் சந்திக்கும் பிரச்னையை கூற விரும்பவில்லை என்று கூறினார்.

குட்கா புகார் கூறப்பட்ட காலத்தில் நான் பணியில் இல்லை, சிபிஐயின் எஃப்.ஐ.ஆரில் என் பெயர் இல்லை  என்றவர், குட்கா புகார் தொடர்பாக நான் யாரையும் சந்திக்கவில்லை, என்னையும் யாரும் வந்து சந்திக்கவில்லை என்று கூறினார்.

சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் 3 தேதிகளில் பணம் கைமாறி உள்ளதாக தேதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன: அடிப்படை ஆதாரம் இல்லாமல் என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது . லஞ்சம் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் நான் ஆணையாளராக இல்லை

குட்கா விவகாரம் தொடர்பாக அப்போதைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அறிக்கை அளிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பிய ஜார்ஜ், னக்கு கீழ் பணியாற்றிய அனைவரிடமும் கடுமையாக நடந்து, பணியை சிறப்பாக செய்ய அறிவுறுத்தியுள்ளேன்  அப்போதைய மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயக்குமார் சரியாக பணியாற்றாததால் அவரை கண்டித்துள்ளேன்  என்று கூறினார். கூடுதல துணை ஆனையர் ஜெயக்குமாருக்கு இவ்வளவு பெரிய முறைகேடு நடைபெற்று வருவது தெரியும் என்றும் கூறினார்.

என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அன்பழகன் எனது பெயரை புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார் என்றவர்,  குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் காலங்களில் நான் பதவியில் இல்லை என்றும்,  குட்கா விவகாரத்தில் 2016 ஏப்ரல், மே, ஜூனில் சோதனை நடந்தது நான் பதவிக்கு வந்தது செப்டம்பரில்தான் என்று விளக்கம் அளித்தார்.

நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றவர், குட்கா குடோன் என கூறப்பட்ட இடத்தில் நடத்திய சோதனையில் புகையிலைப்பொருள் எதுவும் இல்லை.  குட்கா வழக்கில் தகுந்த ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.ஓய்வுபெற்ற அதிகாரிகளை பாதுகாக்க உச்சநீதிமன்றம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. குற்றச்சாட்டு தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது

நான் யார் மீதும் குற்றம் சாட்ட விரும்பவில்லை , சிபிஐ விசாரணை நடத்தி வருவதால் குட்கா விவகாரம் குறித்து வெளிப்படையாக பேச முடியாது நான் ஆணையாளராக இருந்த போது லஞ்சம் வாங்கியதாக கூறப்படுவது தவறு.

குட்கா  விவகாரம் தொடர்பாக மாதவரத்தில் துணை ஆணையராக இருந்த விமலா அவர்க்ளிடம் விசாரித்தேன், அப்போது விமலா உளவுத்துறை பணியில் இருந்தார் , குட்கா விவகாரம் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது என விமலா தெரிவித்து விட்டார்,

இவ்வாறு அவர் கூறினார்.