குட்கா ஊழல்: அமைச்சரின் உதவியாளரிடம் சிபிஐ 7 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை

சென்னை:

குட்கா ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின்  உதவியாளரிடம் சிபிஐ சுமார்  7 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற பொருட்களை தடையை மீறி திருட்டுத்தனமாக விற்பனை செய்ய லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதி அளித்ததாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், காவல்துறை தலைவர், சென்னை மாநகர கமிஷனர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்புக்கழக அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த முறைகேட்டில் சுமார் 40 கோடி ரூபாய் அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டது.

இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ் உள்பட பலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தி பல ஆவனங்களும் கைப்பற்றப்பட்டது.

அதன் அடிப்படையில், குட்கா ஊழல் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ் கரின் உதவியாளர் சரவணனிடம்  சிபிஐ அதிகாரிகள்  ஏழரை மணி நேரம் விசாரணை நடத்தி னர். சென்னை நுங்கம்பாக்கம் சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் நேற்று காலை 10 மணியளவில் சரவணன் ஆஜரானார். அவரிடம் மாலை 5.30 வரை  விசாரணை நடைபெற்றது. அப்போது அவர் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி