கவுகாத்தி:

ந்தியா, இலங்கை அணிகள் கலந்துகொள்ளும் டி20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.  ஆட்டத்தை காண வரும் ரசிகர்களுக்கும் பல கட்டப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

நாடு முழுவதும்  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, இந்தியா இலங்கையிடையிலான டி20 போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், தற்போது, அங்கு போராட்டங்கள் குறைந்து அமைதி திரும்பி, நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், திட்டமிட்டப்படி போட்டிகள் நடைபெறும் என்றும், இரு அணிகள் தொடர்பாக அரங்கம் மற்றும் பிற அனைத்து பொறுப்புகளையும் நாங்கள் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளோம், எல்லாவற்றையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை  அவர்கள் உறுதி செய்து உள்ளார்கள்” என்று அசாம் கிரிக்கெட் அகாடமி தலைவர் ரோமன் தாத்தா தெரிவித்திருந்தார்.

இந்தியா இலங்கைக்கும் இடையேயான டி20 போட்டி, அங்குள்ள பார்சபரா ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கவுகாத்தி  போலீஸ் கமிஷனர் குப்தா , ஆட்டத்தை காண வரும் ரசிகர்கள் எந்தவித போஸ்டர்களையோ, பதாதைகளையோ கொண்டுவர அனுமதியில்லை என்றும்,  “ஸ்கெட்ச் பேனாக்கள் மற்றும் குறிப்பான்கள் அனுமதிக்கப்படாது,”தொலைபேசி,  கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் கீ மற்றும் பர்ஸ் போன்றவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று கூறி உள்ளார்.

இதுகுறித்து கூறிய ஏ.சி.ஏ செயலாளர் தேவாஜித் சைக்கியா,  கிரிக்கெட் காண வரும் ரசிகர்கள், மொபைல் போன், கார் சாவி, பர்ஸ் தவிர வேறும் ஏதும் அனுமதிக்கப்படாது என்றும்,  சுவரொட்டிகள் – வாடகை விளம்பரத்திற்காக பிற நிறுவனங்களால் பயன்படுத்தப்படவும் அனுமதிக்கப்படாது எந்தவொரு சர்வதேச போட்டிக்கும் பாதுகாப்பு தேவை. அதற்கு மேல் ஒன்றும் இல்லை, குறைவும் இல்லை என்றவர் போட்டியை நடத்துவதில் ஏ.சி.ஏ ஒருபோதும் பயப்படவில்லை என்று அவர் கூறினார்.

இந்த போட்டி குறித்து கூறிய பிசிசிஐ பிரதிநிதி மாமன் மஜும்தார் , கவுகாத்தி போட்டியை  காணும் ரசிகர்களுக்கான 39,400 டிக்கெட்டில்  சுமார் 27,000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டு இருப்பதாகவும்,   “நாங்கள் இந்த போட்டியை சிறந்த முறையில் நடத்த விரும்புகிறோம். பொழுதுபோக்குக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இது ஒரு வண்ணமயமான மற்றும் துடிப்பான நிகழ்வாக இருக்கும் ”என்றார்.

“இந்த போட்டி அசாமுக்கு மட்டுமல்ல, வடகிழக்கு முழுவதற்கும் முக்கியமானது. ஐபிஎல் ஹோஸ்டிங் இந்த போட்டியின் வெற்றியைப் பொறுத்தது என்று தெரிவித்தார்.

போட்டி குறித்து கூறிய அசாம் கிரிக்கெட் சங்க தலைவர் ரோமன் தத்தா,  பாதுகாப்பு பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, BCCI மற்றும்அசாம் கிரிக்கெட் சங்கம் நிலைமை குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தற்போது,  நிலைமை அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளன என்று கூறியவர், எதிர்பார்த்தபடி, நேற்று இந்திய வீரர்கள் ஆடுகளத்திற்கு வந்து பயிற்சி பெற்றார்கள் என்றார்.

அசாமில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருவதால், கவுகாத்தியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.