இதுதான் ஜல்லிக்கட்டு, தில் இருந்தா மல்லுக்கட்டு’: வெளியானது ஜல்லிக்கட்டு பாடல் (வீடியோ)

 

பொங்கல் திருவிழாவை ஒட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.  இதனால் கடந்த இரு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.

ஆனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம் என்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டின் பெருமைகளை உணர்த்தும் பாடல் ஒன்று, , ஜி.வி.பிரகாஷ் இசையில்  வெளியாகியுள்ளது.

பாடலை, (கபாலி புகழ்) அருண் ராஜா காமராஜா எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷும், அருண் ராஜா காமராஜாவும் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

‘ஜல்லிக்கட்டு இதுதான் ஜல்லிக்கட்டு, தில் இருந்தா மல்லுக்கட்டு’ என்று அனல் தெறிக்கும் வரிகளுடன் பாடல் இயற்றப்பட்டுள்ளது. இந்த பாடல் மூலம் கிடைக்கும் வருவாய், விவசாயிகளின் நலனுக்கான பயன்படுத்தப்படும் என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

பாடல் வீடியோ