3 குழந்தைகளை தத்தெடுத்த நெல்லை இன்ஸ்பெக்டருக்கு ஜி.வி. பிரகாஷ் பாராட்டு!

சென்னை:

மீபத்தில் நடைபெற்ற விபத்து ஒன்றில் பெற்றோர் பலியானதால், அனாதையாக நின்ற 3 குழந்தைகளை நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் தத்தெடுத்து ஆதரவு கரம் நீட்டினார்.

இந்த தகவல் சமுக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து தகவல் அறிந்த பிரபல இசை அமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ், குழ விபத்தில் இறந்தவரின் மூன்று குழந்தைகளை தத்தெடுத்த காவல்துறை இன்ஸ்பெக்டர் ஆடிவேலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்,

சமீபத்தில் நெல்லை மாவட்டம் மலையடிக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோட்டூர்சாமி என்பவர் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார். அவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், அவரது 3 குழந்தைகளும் ஆதரவின்றி அனாதைகளாக தவித்தனர்.

தத்தெடுத்த குழந்தைகளுடன் இன்ஸ்பெக்டர் ஆடிவேல்

இதுகுறித்து கேள்விப்பட்ட அந்த பகுதியை சேர்ந்த புளியாங்குடி காவல்துறை இன்ஸ்பெக்டர் ஆடிவேல் அந்த 3 குழந்தைகளையும் தத்தெடுப்பதாக அறிவித்து, அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இன்ஸ்பெக்டர் ஆடிவேலின் உதவி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில், இதை அறிந்த  ஜி.வி. பிரகாஷ், அந்த இன்ஸ்பெக்டரை பாராட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,   “விபத்தில் மரணமடைந்த திருநெல்வேலி மாவட்டம், மலையடிக்குறிச்சி கோட்டூர்சாமி யின் மூன்று குழந்தைகளை தத்தெடுத்த மனித நேயர் புளியாங்குடி காவல் நிலைய ஆய்வாளர் ஆடிவேல் அவர்களை பாராட்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.