ஜி.வி.பிரகாஷ் – கெளதம் மேனன் இணையும் படம் ‘செல்ஃபி’….!

இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக தமிழ் சினிமாவில் களமிறங்கியவர் ஜி.வி.பிரகாஷ்.

ஜி.வி.பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் ஆகியோர் இணைந்து நடிக்கும் படத்திற்கு செல்ஃபி என பெயரிடப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இயக்குனர் வெற்றிமாறனின் முன்னாள் உதவியாளர் மதிமாறன் தான் இந்த படத்தினை இயக்குகிறார்.

இயக்குனர் கெளதம் மேனன் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு வில்லனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது.

ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தில் கல்லூரி மாணவராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிகில் புகழ் நடிகை வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய, S.இளையராஜா எடிட்டிங் பணிகளை செய்கிறார்.