ஜி.வி. பிரகாஷ்-ன் ‘ஆயிரம் ஜென்மங்கள்; டிரெய்லர் வெளியீடு….!

[embedyt] https://www.youtube.com/watch?v=UQNxVf44ZI4[/embedyt]

எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகும் படம் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ .

ஹாரர் ஃபேன்டஸி படமான இதன் நாயகியாக ஈஷா ரெப்பா நடித்துள்ளார். சதீஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக இரமேஷ் பி.பிள்ளை இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை சி.சத்யா இசையமைக்கிறார். யு.கே.செந்தில் குமார் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லரை நடிகர் தனுஷ் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.