ஜிம்மில் வர்க்கவுட்டில் ஈடுபட்ட தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ்…..!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் தனுஷ் 43-வது படத்தில் அவருக்கு நாயகியாக மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

D43 படத்தில் நடிகர் பிரசன்னா முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். க்ரைம் திரில்லரான இந்த படத்தில் ஷரஃபு மற்றும் சுஹாஸ் திரைக்கதை எழுதுகின்றனர்.

ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படம் குறித்து பதிவு செய்த ஜிவி, அதில் D43 ஆல்பம் நன்றாக வந்துகொண்டிருக்கிறது என பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் தனுஷுடன் ஜிம்மில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொல்லாதவன், VIP, மாரி 2 போன்ற படங்களில் தனுஷ் 6 பேக் கட்டுடலுடன் நடித்த காட்சிகள் அனைத்தும் ஹிட்டு தான். தற்போது தனுஷ் பாணியை கடைபிடிக்கும் ஜிவி பிரகாஷுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் ரசிகர்கள்.