இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவர் ஜி.வி.பிரகாஷ். இதன் தொடர்ச்சியாக இவர் ‘டிராப் சிட்டி’ எனும் படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.

இப்படத்தை ரிக்கி ப்ரூச்சல் இயக்கியுள்ளார். கைபா எனும் ஹாலிவுட் பட நிறுவனம் சார்பாக தமிழரான டெல் கணேசன் தயாரித்துள்ளார்.

அவர் முன்னதாக டெவில்ஸ் நைட் திரைப்படத்தை KYBA பிலிம்ஸ் பேனரின் கீழ் தயாரித்துள்ளார். அப்படத்தில் நடிகர் நெப்போலியனை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தினார்.

https://www.youtube.com/watch?v=Tjvdg4QBXS8&feature=youtu.be

ட்ராப் சிட்டி என்பது இன்றைய ஹிப்ஹாப் இசை கலாச்சாரத்தை ஒரு கலைநயமிக்க வகையில் எடுத்துக்காடும் திரைப்படமாகும், மேலும் போதைப் பொருளை வியாபாரம் செய்யும் கொள்ளைக் கூட்டத் தலைவனுக்கு எதிராக, சாதாரன மனிதனாகப் போராடும் ராப்பரின் கதையைச் சொல்கிறது.

தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியானது. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இந்த டீஸரை வெளியிட்டார்.