சென்னை: தமிழகத்தில் ஆகஸ்டு 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கலாம் என்று தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது.

கொரோனா தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஆகஸ்டு 31ந்தேதி வரை லாக்டவுடன் நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஏற்கனவே மத்திய அரசு இன்று முதல் நாடு முழுவதும் உடற்பயிற்சி திறக்க அனுமதி அளித்திருந்த நிலையில,  தமிழக அரசும்  வரும் 10ந்தேதி முதல் தமிழகத்தில் உடற்பயிற்சி கூடம் திறக்க பல்வேறு  கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கி உள்ளது.

அதன்படி, 50 வயதுக்கு குறைவானவர்களை மட்டுமே ஜிம்மில் அனுமதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டு உள்ளது.