சென்னை:

சென்னை மெரினாவில் நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி பாஜகவினர் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எச்.ராஜா, மாணவர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்தால். நீங்கள் கல்லூரிகளுக்குள் இருந்து கல் எறிந்தால், உங்கள் மீது குண்டு விழும் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.

எச்.ராசாவின் வன்முறைப்பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில்,அவரை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள், #ARRESTHRAJA என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக்கி வருகின்றனர்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும்  போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், போராடுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு, கைது  உள்பட பல்வேறு மிரட்டல் நடவடிக்கைகளையும்  பாஜக செய்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் பேசிய எச்.ராஜா வன்முறையை தூண்டும் வகையில் பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது அவர் கூறியதாவது,

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுவதாகவும், வழக்கம் போல போராட்டத்தில் நக்ஸல் ஊடுருவல் இருப்பதாவும் தெரிவித்த அவர் இந்த முறை முஸ்லிம் தீவிரவாதிகளும் இருப்பதாக கூறினார். மேலும்,  மாணவர்களின் போராட்டம் குறித்து பேசியவர்,  அவர்களை கொச்சைப்படுத்திய நிலையில், அவர்கள் கல்லூரிகளுக்குள் இருந்துகொண்டு கற்களை வீசுகிறார்கள்.. ஆனால், இனிமேல்,  “மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் இருந்து கற்களை வீசினால், கதவுகளின் இந்தப் பக்கமிருந்து உள்ளே குண்டு விழும்” என மிரட்டினார்.

எச்.ராஜாவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைலானது. இதையடுத்து, மாணவர்கள் அமைப்பினர், மாணவர்கள் மீது குண்டு விழும் என்று பேசிய எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி  #ArrestHraja என்ற ஹேஷ்டேக்  டிரெண்டாக்கி வருகின்றனர்.