Random image

‘அரசாங்கம் புகுந்த கோவில் விளங்கியதாக சரித்திரம் இல்லை’: தமிழகஅரசு மீது எச்.ராஜா காட்டம்

சென்னை:

மை புகுந்த வீடும், ‘அரசாங்கம் புகுந்த கோவில் விளங்கியதாக சரித்திரம் இல்லை’ என்று தமிழகஅரசு மீது எச்.ராஜா கடுமையாக தாக்கி பேசினார்.

நீதிமன்றம் மற்றும் காவல்துறை  குறித்து அவதூறாக பேசிய எச்.ராஜாவை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வருவதாக தமிழக காவல்துறை அறிவித்திருந்தது. ஆனால், நேற்று இரவு காவல்துறை பாதுகாப்புடன்  திண்டுக்கல் அருகே வேடசந்தூரில் நடைபெற்ற  இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில் எச்.ராஜா கலந்துகொண்டார்.

அப்போது மேடையில் பேசிய இந்துமுன்னணி பிரமுகர் ஒருவர் ராஜா குறிப்பிட்டு சிங்கம் இங்கே இருக்கிறது… அவர் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாம் எனசெய்தித்தாள் ஒன்றை காண்பித்து  ஏளனமாக பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், எச்.ராஜா பேவிளதாது,  வடமாநிலங்களில் கொண்டாடப்படுகிற துர்கா பூஜையை போல, தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்திய அளவில், 4 சக்திகள் ஒருங்கிணைந்து இந்து ஒற்றுமைக்கு மாறாக செயல்பட்டு வருகின்றன.

குறிப்பாக இடதுசாரிகள், பிரிவினைவாதிகள், நக்சல்கள் உள்ளிட்டோர் இணைந்து செயல்படுகின்றனர். தூத்துக்குடியில் நடந்த கலவரத்துக்கு இதுபோன்ற அமைப்புகள்தான் காரணம். இதேபோல் 8 வழிச்சாலை திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற விடாமல் இந்த அமைப்பினர் மக்களை தூண்டி விட்டு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர் போன்ற இடங்களில் விலை மதிப்புமிக்க தமிழக கோவில்களின் சிலைகள் உள்ளன. ஆனால் அந்த சிலைகளை அரசால் மீட்க முடியவில்லை. இதுபற்றி கேட்டால், எந்த கோவில் சிலை என தெரியவில்லை என்கின்றனர். இது ஆமை புகுந்த வீடும், அரசாங்கம் புகுந்த கோவிலும் விளங்கியதாக சரித்திரம் இல்லை என்ற பழமொழி சொல்வதை போல உள்ளது.

இதேபோல் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை பிற மதத்தினருக்கு வழிபாட்டு தலங்கள் கட்டுவதற்கு ஒதுக்கி கொடுத்துள்ளனர். எனவே நாம் அனைவரும் மத மாற்றத்தை தடுத்து நிறுத்தி, ஒன்றுபட்ட உணர்வு சக்தியாக, இந்து சக்தியாக திகழ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

எச்.ராஜாவை காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தேடி வருவதாக கூறிய நிலையில், காவல்துறை பாதுகாப்புடன் ராஜா விழாவில் கலந்துகொண்டது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகிறது.

அப்பாவிகளை அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கும் அரசும், காவல்துறையும் ராஜா மீது கை வைக்க பயப்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

சட்டம் அனைவருக்கும் சமம் என்றால்…. அவதூறாக பேசிய எச்.ராஜாவை ஏன் இன்னும் கைது செய்ய வில்லை… அவர் நீதி மன்றத்தை  விமர்சனம் செய்தால் தவறில்லையா?  சாதாரண மக்கள் விமர்சித்தால் மட்டும்தான் குற்றமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏற்கனவே 18எம்எல்ஏக்கள் மீதான வழக்கில் உயர்நீதி மன்ற அமர்வு தீர்ப்பை ஏராளமானோர் கடுமை யாக விமர்சனம் செய்தபோது,  உயர்நீதிமன்ற நீதிபதி பால்கிருபாகரன்,  தீர்ப்பை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?  குறிப்பிட்ட நீதிபதியின் தீர்ப்பை விமர்சிப்பவர்கள் மீது போலீஸ் தாமாக வழக்கு பதிந்திருக்க வேண்டாமா? என்று கேள்வி சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆனால், இன்று அதே உயர்நீதிமன்றம் மீது எச்.ராஜா அபாண்டமாக பேசியது குறித்து நடவடிக்கை எடுக்க மறுத்து வருகிறது….

தமிழக காவல்துறை போல நீதி மன்றங்களும் தற்போது….  அப்பாவிகள் மீதுதான் தங்களது அதிகாரங் களை பிரயோகிக்கும்போல….