Random image

எச்.ராஜா, அவரது பொறுப்புக்கு தகுதியில்லாதவர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சென்னை:

பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் காவல்துறையினரிடம் அடாவடி செய்தார்.   இது தொடர்பான  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எச்.ராஜாவின் செயல் அவர் வகித்து வரும் பதவிக்கு தகுதியில்லாத செயல் என்று காட்டமாக பதில் கூறினார்.

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய ஹெச்.ராஜாவின் செயலை அனைத்து தரப்பினரும் கண்டித்து வருகின்ற னர். எச் ராஜாவின் பேச்சை  தீவிரவாத நடவடிக்கையாக பாரக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள்  ஈவிகேஸ். இளங்கோவன் கூறி உள்ளார்.

இந்த நிலையில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜியுடம் எச்.ராஜாவின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

புதுக்கோட்டை அருகே மெய்யபுரத்தில் குறிப்பிட்ட வழியில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதற்கு போலீஸார் தடைவிதித்த நிலையில், அவர்களுடன் பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். விநாயகர்  ஊர்வலம் செல்ல வழிவிடச்சொல்லி போலீசாரையும், நீதி மன்றத்தையும் அவதூறாக பேசினார். இ

து தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளி யானது. இதைத் தொடர்ந்து, எச் ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து,  எச் ராஜா உட்பட 18 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், எச்.ராஜா, அவரது பொறுப்புக்கு தகுதியில்லாதவர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி உள்ளார்.

எச்.ராஜாமீது சென்னை உயர்நீதி மன்றமும் சுமோட்டோ வழக்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.