“தமிழும் சமஸ்கிருதமும் தண்டவாளங்களைப் போல இணைந்தே செல்லும்” என்று பா.ஜ.க.வின  எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரது முகநூல் பதிவில் தெரிவித்திருப்பதாவது..

“நேற்று அண்ணண் திரு. இல.கணேசன் அவர்கள் நடத்திவரும் பொற்றாமரை அமைப்பின் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அதில் பதினொன்கீழ் கணக்கு இலக்கியம் பற்றி பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் அவர்கள் பேசினார்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழும் சமஸ்கிருதமும் எவ்வாறு இனைந்தே இருந்துள்ளது என்று எடுத்துக் காட்டினார்.

அதாவது பதினொன்கீழ் கணக்கிலுள்ள இலக்கியங்களின் பெயரே இவ்விரு மொழிகளையும் தாங்கியுள்ளது. உதாரணமாக “திரிகடிகம்” என்பது த்ரிணி அதாவது 3 என்பதாகும். “நான்மணிக்கடிகை” இதில் நான் மட்டுமே தமிழ். அதுபோல “சிறுபஞ்சமூலம்” இதில் சிறு மட்டுமே தமிழ். “ஏலாதி” இதில் ஏல தமிழ் ஆதி சமஸ்கிருதம்.

எனவே தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் தமிழ் இலக்கியங்களிலும் தமிழ் அறிஞர்கள் மத்தியிலும் மோதல் இருந்ததில்லை என்பது தெளிவாகிறது. இவ்விரு மொழிகளும் இரயில் தண்டவாளத்தைப் போன்று இணைந்தே போற்றப்பட்டு வந்துள்ளது. மிகப்பெரும் தமிழ் அறிஞர் டி.என். இராமச்சந்திரன் அவர்கள் சமஸ்கிருதம் தேவ பாஷை. தமிழ் மகாதேவ பாஷை என்று கூறுவார்.

ஆனால் மதம் மாற்றும் ஏஜெண்ட் ஆங்கிலேய பாதிரி கால்டுவெல் இந்தியாவிற்கு வந்த பிறகுதான் இந்த செயற்கையான மோதல் உருவாக்கப்பட்டது. பிற மொழிகளை வெறுப்பது தமிழ் மொழிப்பற்றாகாது. கால்டுவெல் அடியொற்றிகள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழ் மொழியே கற்க்காமல் மருத்துவராக, பொறியாளராக ஒருவர் பட்டம் பெற முடியும் என்ற நிலைமை தமிழகத்தில் உருவாகியுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார் ஹெச். ராஜா.