Random image

நீதிமன்றத்தை அவமதித்து பேசிய எச் ராஜா (விடியோ)

புதுக்கோட்டை

பாஜக தலைவர் எச் ராஜா உயரிநீதிமன்றத்தை முடிக்கு சமமாக பேசியது கடும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

புதுக்கோட்டையில் விநாயகர் சிலை மேடை அமைக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.    அந்த விழாவுக்கு பாஜக தலைவர் எச் ராஜா வந்திருந்தார்.   அவர் தடையை மீறி விநாயகர் சிலை அமைக்க முயன்ற போது அவரை காவல்துறையினர் தடுத்துள்ளனர்.

அந்த நேரத்தில் எச் ராஜா காவல்துறையினரை கடுமையாக தாக்கி பேசி உள்ளார்.    காவல்துறையினர் அனைவரும் லஞ்சம் வாங்குபவர்கள் என்னும் தொனியில் பேசிய அவரிடம் உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து காவலர்கள் சொல்ல முற்படுகையில் அவர் “நீதிமன்றமாவது. ம..வது” (முடிக்கு மற்றொரு வார்த்தை) என பேசியது வீடியோவில் பதிவாகி உள்ளது.

இந்த வீடியோ தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   எச் ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழ்க்கு தொடுக்க வேண்டும் என பலரும் பதிந்து வருகின்றனர்.