திருமாவளவனை கண்டித்து போராடிய எச்.ராஜா கைது

நாகை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து நாகையில் பாஜக.வினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க தேசிய செயலர் எச்.ராஜா தலைமையில் சுமார் 500 பா.ஜ.க.வினர் கலந்து கொண்டனர்.

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட எச்.ராஜா உள்ளிட்ட பாஜக.வினரை வாஞ்சியூரில் போலீசார் கைது செய்தனர். இதனால், போலீசாருக்கும் பா.ஜ.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.