எச்.ராஜாவின் அட்மின் செய்த புதிய முட்டாள்த்தனம்!

சென்னை

பாஜக தலைவர் எச் ராஜா டிவிட்டரில் தவறாக பதிவு செய்து பின் அது நீக்கப்பட்டுள்ளது.

இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என உச்ச நீதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறி பட்டாசு வெடித்த ஒரு டில்லி சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த எச்.ராஜா, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்திருந்தார். உடனே சிலர், ‘எச்.ராஜாவின் அட்மின் முட்டாள்த்தனமாக பதிந்திருக்கிறார்.

டில்லி காவல்துறை, மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதாவது மத்திய பாஜக அரசிடம் இருக்கிறது. இது கூட தெரியவில்லையே எச்.ராஜாவின் முட்டாள் அட்மினுக்கு’ என்று கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த பதிவை எச்.ராஜாவோ அவரது அட்மினோ நீக்கியிருக்கிறார்கள்

Leave a Reply

Your email address will not be published.