Random image

எச்.ராஜாவின் செயல் தீவிரவாத நடவடிக்கை: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை:

பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் காவல்துறையினரிடம் அடா வடியாக பேசி வாக்குவாதம் செய்தார்.  இது தொடர்பான  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், “நீதிமன்றத்தை அவதூறாக பேசிய ஹெச்.ராஜாவின் செயலை தீவிரவாத நடவடிக்கையாக பாரக்க வேண்டும்!” என்று தமிழக காங்கிரஸ் முன்னாள்  ஈவிகேஸ். இளங்கோவன் கூறி உள்ளார்.

புதுக்கோட்டை பகுதியில் நடைபற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்துகொண்ட  பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச் ராஜா, மசூதி வழியாக ஊர்வலம் செல்வதை தடுத்த காவல்துறையினரிடம்,  வழிவிடச்சொல்லி போலீசாரையும், நீதி மன்றத்தையும் அவதூறாக பேசினார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளி யானது. இதைத் தொடர்ந்து, எச் ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.

அதைத்தொடர்ந்து,  எச் ராஜா உட்பட 18 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், எச்.ராஜா மீது உயர்நீதி மன்றமும் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன், “நீதிமன்றத்தை அவதூறாக பேசிய ஹெச்.ராஜாவின் செயலை தீவிரவாத நடவடிக்கையாக பாரக்க வேண்டும்!” என்று கூறி உள்ளார்.