ஹாதியா கணவருக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு!! விசாரணையில் அம்பலம்

கொச்சி:

ஹாதியாவின் கணவருக்கு ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.)தெரிவித்துள்ளது.

கேரளாவில் இந்து பெண்களை இஸ்லாமிய வாலிபர்கள் காதலித்து திருமணம் செய்து தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதாக புகார் எழுந்துள்ளது. ‘லவ் ஜிஹாத்’ என்று இந்த செயலுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தவகையில் அகிலாவை, ஷபின் ஜஹான் என்பவர் திருமணம் செய்துள்ளதாக, அகிலாவின் தந்தை குற்றம் சாட்டினார். அகிலா இஸ்லாமியத்துக்கு மாறி, ஹாதியா என பெயர் மாற்றம் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கில் ஷபின் ஜஹானிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஹாதியாவின் கணவர் ஷபின் ஜஹானுக்கு ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் மன்சீத், சப்வான் என்ற 2 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அவர்களின் பேஸ்புக் குழுவில் ஷபின் ஜஹான் தொடர்பில் இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹாதியாவுடனான திருமணம் மன்சீத், சப்வான் மூலம் நடந்துள்ளதும் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.